வணக்கம்!
நமது ஜாதககதம்பத்தை படிப்பவர்கள் பெரும்பாலும் ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. அதற்காகவே முடிந்தவரை என்னுடைய உண்மையான அனுபவத்தில் உள்ளதை எடுத்து சொல்லிவிடுவது உண்டு.
ஒவ்வொருவரும் இந்த காலத்தில் நானும் எனது குடும்பமும் ஆன்மீகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிகாட்டுவதில் அதிக அக்கறையோடு இருக்கின்றனர். ஆன்மீகம் என்பது நமக்கு என்பதைவிட அதனை சொல்லி பெருமை கொள்வதில் அதிகம் விரும்புகின்றனர்.
ஆன்மீகத்தில் உள்ள அனைத்தையும் எடுத்து செய்துக்கொண்டு இருக்கின்றனர். அதாவது ஒவ்வொருவரும் முடிந்தவரை அனைத்து பண்டிகையும் எடுத்து செய்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது புரட்டாசி மாதம் என்பதால் பெருமாளுக்கு சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கின்றனர்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விஷேசம் என்றாலும் புரட்டாசி விரதம் இருந்த பெரும்பான்மையான குடும்பங்கள் இன்று அட்ரஸ் இல்லாமல் போய்விட்டது என்பது தான் உண்மையான ஒரு செய்தி.
கடவுளுக்கு விரதம் இருந்தால் நல்லது தானே அது எப்படி இப்படி போய்விட்டது என்று கேட்கலாம். என்னுடைய அனுபவத்தில் நான் நிறைய குடும்பங்களை பார்த்து இருக்கிறேன் நன்றாக இல்லாமல் குடும்பம் அழிந்துவிட்டது. இதில் ஐயங்கார குடும்பமும் விதிவிலக்கு இல்லை.
எங்களுடைய பகுதியில் உள்ளவர்கள் இந்த விரதம் இருந்தவர்கள் பெரும்பாலும் தற்பொழுது இந்த விரதத்தை மேற்கொள்வதில்லை. ஸ்ரீரங்கம் சென்று இந்த விரதத்தை விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். ஒரு விரதத்தை விடவேண்டும் என்றால் அந்த ஸ்தலத்திற்க்கு சென்று விரதத்தை விட்டுவிடவேண்டும் என்ற சடங்கை செய்துவிட்டு வருவார்கள்.
பெருமாளுக்கும் எனக்கும் சண்டை என்பது எல்லாம் கிடையாது. தற்பொழுது பயணத்தில் கூட நிறைய பெருமாள் கோவில் எல்லாம் தரிசனம் செய்துவிட்டு வந்தேன். விரதமுறைகளை எல்லாம் அனுசரிக்கவேண்டாம் தரிசனம் மட்டும் செய்துவிட்டு வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment