வணக்கம்!
ஒரு இளைஞராக இருந்து நீங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தீர்கள் என்றாலும் கஷ்டகாலத்திலும் சாப்பிடும் சாப்பாட்டை நல்ல சத்துள்ள உணவாக பார்த்து சாப்பிட்டுக்கொண்டு வாருங்கள். நாம் கஷ்டப்படுகிறோம் அதனால் சாப்பாட்டை ஒரு நேரம் நிறுத்திவிடுலாம் என்று நினைக்ககூடாது. எல்லா நேரமும் நல்ல சாப்பிடுங்கள்.
ஏன் சாப்பிட சொல்லுகிறேன் என்றால் அதற்கு காரணம் இருக்கின்றது. உடல் நன்றாக இருப்பதற்க்கு நல்ல சாப்பாடு உதவி செய்யும். நீங்கள் ஒரு கோவிலுக்கு சென்றாலும் அந்த கோவிலில் சக்தியை உடல் நன்றாக கிரகித்துக்கொள்ளும்.
என்னங்க விரதம் இருந்து சென்றால் தானே சக்தியை கிரகித்துக்கொள்ள முடியும் நீங்கள் நன்றாக சாப்பிட சொல்லுகின்றீர்களே என்று நினைக்கலாம். சாப்பாட்டை நன்றாக கிடைக்கும் பணக்காரர்கள் சாப்பாட்டை நிறுத்தி விரதம் இருந்து கோவிலுக்கு செல்லலாம் ஆனால் சாப்பாடு கிடைக்காத ஏழைகள் நன்றாக சாப்பிடவேண்டும்.
இளைஞர்கள் நன்றாக சாப்பிடவேண்டும். சம்பாதிக்கும் காலத்தில் சம்பாதித்துக்கொள்ளலாம். உடல் சக்தி மற்றும் ஆன்மசக்தி இருக்கும்பொழுது செய்கின்ற பரிகாரம் நன்றாக வேலை செய்யும்.
ஒரு சில தீயகிரகங்களின் தசா இளமை காலத்தில் வரும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர்க்கு சாப்பிட சாப்பாடு கிடைக்காது. அப்படி கொடுமையான தசாவாக இருக்கும். கிடைக்கின்றதை வைத்து சாப்பிடும் நிலை இருக்கலாம். தசாவையும் மீறி நீங்கள் சாப்பிட பாருங்கள் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment