வணக்கம்!
மாந்தி பலனைப்பற்றி பார்த்து வருகிறோம். கடந்த பதிவில் மாந்தி மூன்றாவது வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவிலும் பார்க்கலாம்.
மூன்றில் நின்றால் ஆயுளை அதிகரிக்க செய்யும் அதோடு நல்ல தைரியத்தையும் கொடுக்கும். தைரியம் என்றால் இவர்களால் பல பிரச்சினை உருவாகும். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கமாட்டார்கள். ஏதாவது ஒரு வில்லங்கத்தை செய்துக்கொண்டே இருப்பார்கள்.
கலகம் உருவாக்கி அதில் மகிழ்ச்சி காணும் வகையில் சார்ந்தவராக இருப்பார். எப்படியும் இவருக்கு பணவரவு வந்துக்கொண்டு தான் இருக்கும். கையில் காசு வற்றாது. கொள்ளையடித்தாவது வாழவேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.
ஒரு சிலருக்கு முன்னோர்களின் சாபம் ஏற்பட்டு அதனால் சிக்கி தவிப்பராக இருப்பார்கள். ஒரு சிலருக்கு ஆவிகளின் தொல்லை இருக்கும். ஆவிகள் வந்தன பேய் பிசாசு என்று ஏதாவது ஒன்றைப்பற்றி சொல்லுவார்கள்.
இவர்கள் தொடர்பு வைத்திருக்கும் ஆட்கள் ஆவிகளாேடு பேசுகிறேன். பேயோடு வாழ்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஆட்களாக இருக்கலாம். ஒரு சிலர் காது கேளாதவர்களாக இருப்பார்கள்
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment