வணக்கம்!
ஒரு சிலர் மாந்தி வழிபாட்டை செய்வார்கள். ஏதோ ஒரு இடத்தில் மாந்திக்கு கோவில் இருக்கின்றது என்று நினைக்கிறேன். ஒரு முறை நான் மாந்தியைப்பற்றி எழுதுவதால் என்னை தொடர்புக்கொண்டு இந்த கோவிலுக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள். நான் செல்லவில்லை. அது எந்த ஊர் என்று கூட எனக்கு ஞாபகம் இல்லை.
ஒரு சிலர் வாய் பேசமுடியாத ஊமையாக இருப்பார்கள். அவர்களின் ஜாதகத்தில் மாந்தி இரண்டாவது வீட்டில் இருக்கும். இரண்டாவது வீடு வாக்குஸ்தானம் என்பதால் பேசமுடியாத ஒரு நிலை கூட ஒரு சிலருக்கு ஏற்படலாம்.
யாருக்கு இரண்டாவது வீடு கெடலாம் என்றால் ஆன்மீகத்தில் இருப்பவர் சோதிடர்கள் போன்றவர்களுக்கு இரண்டாவது வீடு கெட்டால் அவர்கள் சொல்லும் வாக்கு வேதவாக்காக இருக்கும். அவர்களின் வாக்கால் கூட பலன் நடக்கும்.
இன்றைக்கு பல நண்பர்களுக்கு இரண்டாவது வீடு கெட்டு இருக்கின்றது. இவர்கள் ஆன்மீகவாதிகளோ சோதிடர்களாே கிடையாது இவர்கள் இல்லறவாதிகள். அது எப்படி நடக்கிறது என்று கேட்கலாம்.
வீட்டில் பேசுவதே கிடையாது. வீட்டில் பேசினால் மனைவி தொல்லை தருவார் என்று பேசுவது கிடையாது. இவர்கள் ஊமைபோல வீட்டில் இருப்பதால் நன்றாகவே சோதிடம் வேலை செய்கிறது. மாந்தி இரண்டில் இருந்து கெடுத்து இவர்களின் வாயை அடைத்து இல்லறத்தில் வாழவைத்துவிடுகிறது.
நான் பேசினால் தானே பிரச்சினை பேசாமல் ஊமைபோல இருந்தால் இரண்டாவது வீடு கெட்டாலும் நல்ல பலனை நம்ம ஆட்கள் அனுபவித்துவிடுகிறார்கள். உங்களின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் மாந்தி இருந்தால் பேசாமல் இருங்கள். நல்ல பலனை நீங்களும் அனுபவிக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment