வணக்கம்!
மாந்தியைப்பற்றி பார்த்து நீண்டநாள்களாகவிட்டது. மாந்தியைப்பற்றி பார்க்கலாம். ஒருவருக்கு மாந்தி கிரகம் லக்கினத்தோடு சம்பந்தப்பட்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். சம்பந்தப்பட்ட ஜாதகரின் குணம் கொஞ்சம் மோசமாக இருக்கும்.
லக்கினத்தோடு சம்பந்தப்படும்பொழுது அவர் அதிகம் பேசாதவர்களாக அதே நேரத்தில் வெட்கப்படும் நபராக இருப்பார். வெட்கப்படுவதால் இவர் மென்மையானவர் என்பது எல்லாம் கிடையாது. படுமோசமான செயல் எல்லாம் செய்பவர்களாக இருப்பார்கள்.
உள்குத்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள். இவர்களால் கலகம் விளையும். பெரும்பாலும் இவர்களுக்கு திருமணம் அமைவது கிடையாது. திருமணம் நடைபெற்றாலும் அந்தளவுக்கு திருமண வாழ்வு இருப்பதில்லை.
திருமணம் செய்யாமல் பல பேர்களோடு தொடர்பு இருக்கும். தொடர்பு பெரும்பாலும் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள் போல் இருப்பவர்களிடம் இவர்களின் தொடர்பு இருக்கும்.
எந்த லக்கினத்தில் மாந்தி அமைந்திருக்கின்றது என்பதை பொருத்து பல விசங்கள் மாறுப்படும். அவர்களின் ஜாதகத்தை வைத்து தான் முழுமையான பலனை நாம் காணலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment