Followers

Wednesday, August 29, 2018

கோவிலுக்கு செல்லகூடாதா?


வணக்கம்!
          கோவிலுக்கு செல்ல சொல்லுகின்றீர்கள் நான் தினமும் கோவிலுக்கு செல்கிறேன் ஆனால் எனக்கு ஒன்றும் நடக்கவில்லை ஒவ்வொரு நாளும் வாழ்க்கை கீழே சென்றுக்கொண்டே தான் இருக்கின்றது என்று நண்பர் கேள்வி அனுப்பியிருந்தார்.

கோவிலுக்கு செல்வது என்பது உடனே நமக்கு நல்லது நடந்துவிடும் என்று சொல்லமுடியாது. கோவிலுக்கு சென்றால் மனஅமைதி கிடைக்கின்றது என்று பலர் செல்வார்கள் ஆனால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது உடனே நடந்துவிடாது.

கோவிலுக்கு சென்று வெளியே வந்தவுடன் மனம் அடுத்தநிலைக்கு மாறிவிடும் உடனே பிரச்சினையும் உங்களை துரத்த ஆரம்பித்துவிடும். நிறைய பிரச்சினைகள் இருப்பவர்கள் கோவிலுக்கு செல்ல கூடாது என்பது தான் உண்மையாக இருக்கின்றது.

நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை அப்படியே நமக்கு திருப்பிக்கொடுக்ககூடிய ஒரு நிலையை தான் பல கோவில்கள் செய்கின்றன. இது பல பேர்களின் வாழ்வில் நடந்துக்கொண்டு வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

கோவிலை நாம் குறைத்து மதிப்பிடுவதில்லை ஆனால் நாம் எப்படி கோவிலுக்கு சென்றால் நமக்கு நல்லது நடக்கும் என்பதை அறிந்துக்கொண்டு கோவிலுக்கு செல்லுங்கள் கண்டிப்பாக நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: