Followers

Saturday, August 18, 2018

கடனும் நோயும்


வணக்கம்!
         மறைவுஸ்தானத்தைப்பற்றி பேசும்பொழுது நாம் நல்லதைப்பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோம். பல நண்பர்கள் என்னிடம் பேசும்பொழுது சொல்லுவார்கள். கடன் தொல்லை தாங்கவே முடியவில்லை என்று சொல்லுவார்கள். கடன் இல்லை என்று யாரும் சொன்னது கிடையாது.

நூறு சதவீதத்திற்க்கு ஒன்று குறையலாம் அனைவரும் கடன் என்று சொல்லிவிடுவார்கள். அனைவரும் சொல்லப்படுகின்ற வார்த்தை கடன் இருக்கின்றது. கடன் என்று சொன்னால் அது ஆறாவதுவீடு சம்பந்தப்படாமல் இருக்காது. மறைவுஸ்தானமான ஆறாவது வீடு அனைத்து வீடுகள் போல சமமாகவே வேலை செய்துக்கொண்டு இருப்பதால் கடன் உருவாகும் என்று சொல்லலாம்.

கடன் இருந்துக்கொண்டே இருப்பது ஏதாவது ஒரு வகையில் நல்லது என்று கூட சொல்லலாம். கடன் இல்லை என்றால் நோயின் தாக்கம் அதிகமாக சென்றுவிடும். பலர் இரண்டும் இருக்கின்றது என்று சொல்லுகின்றனர்.

கடனும் இருக்கின்றது நோயும் இருக்கின்றது என்றாலும் இது அதிகமாக சென்றுவிடகூடாது. அதிகமாக சென்றுவிட்டால் பிரச்சினையாகிவிடும். ஆளை கொல்லும் அளவுக்கு இது சென்றுவிடகூடாது.

எல்லாவிதத்திலும் கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும் அதோடு ஒவ்வொரு நாளும் நீங்கள் கும்பிடும் சாமியிடம் கடனும் நோயும் அதிகம் கொடுத்துவிடதே என்று சொல்லவேண்டியது தான் இதற்கு வழி. எச்சரிக்கை மற்றும் தினமும் செய்யும் வழிபாட்டில் குறைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: