Followers

Friday, February 22, 2019

பாக்கியஸ்தானம் கெடுதல் நல்லது எப்பொழுது?


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாவது வீடு ஒருவருக்கு நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லுவது உண்டு. பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் தான் அவர்களுக்கு அனைத்தும் எளிதில் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். 

என்னைப்பொறுத்தவரை பாக்கியஸ்தானம் கெடுவது ஒரு விதத்தில் நல்லது என்று சொல்லுவேன். என்ன பாக்கியஸ்தானத்தைப்பற்றி நிறைய எழுதிவிட்டு இதனை சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். பாக்கியஸ்தானம் எனும் வீடு நன்றாக இருந்தால் அவர்களுக்கு அவர்களின் தந்தை வழி சொத்து நிலைத்து இருக்கும்.

தந்தை வழி சொத்து நிலைத்திருந்தால் அவர்களின் வாரிசு சரியாக இருக்காது. இதற்கு தான் பாக்கியஸ்தானம் கெடவேண்டும் என்று சொல்லுகிறேன். தந்தை வழி சொத்தை வைத்து பிள்ளைகள் ஒழுங்காக பராமரிப்பது கிடையாது. பிள்ளைகள் ஒன்றும் தெரியாமல் வளர்ந்துவிடுகின்றனர்.

பாக்கியஸ்தானம் கெட்டால் கண்டிப்பாக கடுமையான போராட்டத்திற்க்கு பிறகு அவர்கள் நன்றாக சம்பாதித்துவிடுகின்றனர். பாக்கியஸ்தானம் கெட்டால் நிறைய போராட்டம் பெற்று அவர்கள் சம்பாதிப்பதால் அந்த சொத்து கெடுவதில்லை.

உங்களின் வாரிசுகளுக்கு பாக்கியஸ்தானம் கெட்டால் அதனைப்பற்றி கவலைப்படமால் இருந்துவிடுங்கள். நீங்கள் சொத்து சம்பாதிக்கவில்லை என்றாலும் அவர்கள் போராட்ட வைத்து அதனை சம்பாதிப்பார்கள்.பல வாரிசுகளை நான் பார்த்து இருக்கிறேன் சம்பாதிக்காமல் அப்படியே அப்பன் சொத்து தருவான் அதனை விற்று நாம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கின்றனர். 

அப்பன் சொத்து வைத்திருப்பது ஒரு ஆராேக்கியமான ஒரு விசயம் தான் ஆனால் அதனை எப்படி தக்க வைத்துக்கொள்வது என்பதை அந்த வாரிசுகள் புரிந்து இருந்தால் அது நன்றாக இருக்கும். பல வாரிசுகள் அனைத்தையும் இழந்துவிடுவதால் இதனை சொல்லுகிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: