Followers

Monday, February 4, 2019

அமாவாசை


வணக்கம் !
          ஆன்மீகத்தில் மிகவும் புனிதமாக கருதப்படும் நிகழ்வு புனித நீராடுதல். புனித நீராடுதல் நமது முன்னோர்களின் ஆசி மற்றும் அந்த புனித நீராடுதலில் ஏற்கனவே நீராடிய புண்ணிய ஆத்மாக்களின் ஆசியை நமக்கு கிடைக்கும்.

காசியில் நீராடுவார்கள் காசியில் நீராடினால் அங்கு ஏற்கனவே நீராடிய எத்தனையோ நல்ல ஆத்மாக்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும் அது உங்களின் பாவங்களை அனைத்தையும் போக்கி உங்களுக்கு நல்லது நடக்கும். இது தான் புனித நீராடுதலில் உள்ள பெரிய விஷேசம் என்று சொல்லலாம்.

அமாவாசையில் நீராடும்பொழுது அது இன்னமும் வலுச்சேர்த்து அனைத்து ஆத்மாக்களிலும் ஆசியையும் கிடைக்கசெய்யும். அமாவாசையில் மட்டும் தான் ஆத்மாக்கள் அனைத்தும் இந்த பூமி கிரகத்திற்க்கு வந்து செல்வதாக ஐதீகம்.

நேற்று பல நண்பர்கள் அமாவாசையில் என்ன செய்யலாம் என்று கேட்டனர். அமாவாசையில் விரதம் இருக்கலாம். உங்களுக்கு அருகில் இருக்கும் புனித ஸ்தலங்களுக்கு சென்று அங்கு நீராடுவது இருந்தால் நீராடலாம்.

உங்களுக்கு அருகில் கடல் இருந்தால் கூட அங்கு நீராடிவிட்டு வருவதும் சிறப்பான ஒன்றாக இருக்கும். கடல் எந்த கடலாக இருந்தாலும் பரவாயில்லை அதில் நீராடிவிட்டு வாருங்கள். இதனை செய்தாலே போதுமானது. கடல் அருகில் இல்லை என்றால் ஆற்றில் கூட நீராடலாம்.

அம்மன் பூஜை விரைவில் நடைபெற உள்ளது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: