Followers

Wednesday, February 6, 2019

பாதகாபதி


வணக்கம்!
         ஒருவரின் ஜாதகத்தில் பாதகாபதி என்பவர் எந்த இடத்தில் இருந்தாலும் அவரின் வழியாக சில பிரச்சினைகளை ஜாதகருக்கு அந்த தசா இல்லை என்றாலும் கொடுத்துக்கொண்டே இருப்பார். பாதகாபதி தன்னுடைய தசாவில் தான் பலனை கொடுக்கவேண்டும் என்பதில்லை அவ்வப்பொழுது கொடுத்துக்கொண்டு இருப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் பாதகாபதி என்பவர் ஏழாவது வீட்டில் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். ஏழாவது வீடு துணைவரை காட்டக்கூடிய ஒரு இடம் அந்த இடத்தில் பாதகாபதி என்பவர் அமர்ந்தால் அவரால் பிரச்சினை வரும்.

பிரச்சினை எப்படிப்பட்டது என்றால் மனைவி கோபம் உடையவராக இருக்கலாம். பாதகம் என்றாலே அது சண்டை தானே முதலில் உருவாகும். இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுத்திக்கொண்டு இருப்பார்.

மாமியார் வீட்டில் நிறைய அசிங்கப்படுபவர்களுக்கு எல்லாம் பாதகாபதி ஏழாவது வீட்டோடு தொடர்பை வைத்துக்கொண்டு இருப்பார். இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கலாம் அல்லவா.  நீங்கள் மனைவியோடு சண்டை சச்சரவு வைத்துக்கொள்ளகூடாது.

மாமியார் வீட்டிற்க்கு சென்றால் அங்கு தங்ககூடாது. உங்களின் மனைவியை கொண்டு சென்றுவிட்ட பிறகு உடனேயே வந்துவிடுவது உங்களுக்கு நல்லதை தரும். முதலில் எச்சரிக்கையோடு இருந்துவிட்டால் போதும் அதன்பிறகு வழிபாட்டை மேற்க்கொள்ளலாம்.

உங்களின் தந்தையை காட்டக்கூடிய ஸ்தானத்தில் பாதகாபதி அமர்ந்து இருந்தால் உங்களின் தந்தை அல்லது தந்தையின் உடன்பிறப்புகள் உங்களுக்கு வஞ்சகத்தை மட்டுமே செய்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களை விட்டு தள்ளி இருப்பது நல்லது என்பதை புரிந்துக்கொண்டு இருங்கள்.

ஜாதகத்தில் பாதகாபதி எங்கு அமர்கிறாரோ அந்த இடத்தில் உள்ள காரத்துவத்தை எல்லாவற்றையும் தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் உங்களின் செயல்பாட்டை தீர்மானியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 

No comments: