Followers

Thursday, October 10, 2019

கேள்வி & பதில்


வணக்கம்!
          உணவகங்களில் சாப்பிடவேண்டாம் என்று சொல்லிருந்தேன். இதில் இருந்து பல்வேறுதரப்பட்ட கேள்விகள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டு இருக்கின்றன. இதற்கான பதிலை தருகிறேன்.

உணவகங்களில் சாப்பிடுவது முதலில் தரம் என்பதை தாண்டி அது எப்படிப்பட்ட ஆட்களால் சமைக்கப்படுகின்றது என்பதை முதலில் நாம் பார்க்கவேண்டும். சமைக்கும் ஆட்களில் எண்ணத்தை உணவில் நாம் பார்க்கவேண்டும். சமைக்கும் ஆட்களில் எண்ணம் எப்படிப்பட்டது என்பது அவர்களின் உணவில் இருந்தே உங்களுக்குள் ஊடுருவும். நல்ல எண்ணத்தில் யாரும் வேலை பார்ப்பதில்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு சிலரின் மோசமான எண்ணம் உங்களுக்குள் ஊடுருவி வந்தால் அந்த எண்ணத்தால் பாதிப்படைவது நீங்களாகவே இருக்கும். நீங்களே உங்களின் வீட்டில் சமைத்தால் நல்ல எண்ணம் உங்களுக்குள் ஊடுருவும். சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்கள் அனைத்தும் ஒரே விதமாக தான் இருக்கும் ஆனால் சமைக்கும் ஆட்களின் எண்ணத்திற்க்கு தகுந்தமாதிரி தான் சமையலின் ருசி இருக்கின்றது.

ஒருவரை உருவாக்குவதில் அவர் அவர்கள் சாப்பிடும் உணவு முக்கியபங்கு வகிக்கின்றது. உணவகங்களில் நீங்கள் சாப்பிட்டால் உணவின் ருசி இருக்கும் ஆனால் உங்களை அது நல்லவிதமாக வளர்க்காது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நம்முடைய ஆட்கள் உணவகங்களில் சாப்பிடுவது ஒரு நாகரீகம் என்று நினைக்கின்றனர். உணவகங்களில் சாப்பிட்டு தான் நாகரீகம் வளரவேண்டும் என்றால் அந்த மாதிரியான ஒரு முட்டாள் தனமான நாகரீகம் தேவையில்லாத ஒன்று என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நான் அதிகமான நாட்கள் உணவங்களில் சாப்பிட்ட காரணத்தால் அந்த உணவகங்களில் இருந்து என் உடல்நிலை தான் சரியில்லாமல் போனதே தவிர அதில் இருந்து ஒன்றையும் நான் பெற்றதில்லை என்பதை அனுபவத்தில் வாயிலாகவே உங்களுக்கு சொல்லுகிறேன். உங்களால் முடிந்தவரை உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

விரைவில் அம்மன் பூஜை நடைபெறுவதால் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: