Followers

Thursday, October 3, 2019

வெட்கத்தை விட்டால் வெற்றி


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு என்பது தைரியத்தை கொடுக்கும் வீடாக இருக்கின்றது. மூன்றாவது வீடு தீயகிரகங்கள் ஆளுமையில் இருந்தால் ஜாதகர் தைரியமாக இருப்பார். மூன்றாவது வீடு சுபக்கிரகத்தின் ஆளுமையில் இருந்தால் ஜாதகர் பயப்படுவார்.

இந்த காலத்தில் தைரியம் என்பது ஒருவரோடு சண்டைபோடவேண்டும் என்பதில்லை அல்லது வாள் எடுத்துக்கொண்டு சண்டைக்கு சென்றாக வேண்டும் என்பதில்லை. ஒருவர் அடுத்தவர்களோடு எந்த வித பயமும் இல்லாமல் பேசுவது அவருக்கு வரும் பிரச்சினையை அவரே எதிர்க்கொள்வது எல்லாம் தைரியத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

கிராமபுறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு செல்பவர்கள் நகர்புறங்களில் இருப்பவர்களிடம் பேசுவதற்க்கு கூட பயம்கொள்வார்கள். இது பயம் என்பதைவிட வெட்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். இதனை எல்லாம் மூன்றாவது வீட்டில் இருந்து தான் நடக்கும்.

ஒருவருக்கு மூன்றாவது வீடு தீயகிரகத்தின் பிடியில் இருந்தால் அவர் எதற்கும் பயம் கொள்ள மாட்டார். அவர் எதிலும் வெட்கமும் படமாட்டார். வெட்கத்தை போக்கினாலே பாதி பேர் வெற்றி அடையலாம்.

வெட்கத்தால் வெற்றி பெறாமல் போனவர்கள் அதிகம் பேர்கள் இருக்கலாம். இதனை எல்லாம் ஏன் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன் என்றால் மூன்றாவது வீடு தைரியம் மற்றும் வெட்கம் இல்லாமை போன்றவற்றை கொடுக்கும் வீடு. வெட்கம் என்பது இல்லாமல் இருந்தால் வெற்றி பெறலாம். 

இன்றைய காலத்தில் வெட்கத்தை போக்குவதற்க்கு கூட கல்வி இருக்கின்றது. நீங்களே சிந்தனை செய்து பாருங்கள். வெட்கப்பட்டு கேட்காமல் உங்களை விட்டு சென்றது ஏராளமாக இருக்கும் அதனால் வெட்கத்தை தேவைப்படும் இடத்தில் மட்டும் வைத்துக்கொண்டு மீதி நேரத்தில் வெட்கத்தை போக்கிக்கொள்ளுங்கள். சிறப்பான ஒரு எதிர்காலம் உங்களுக்கு அமைந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: