வணக்கம்!
          நேற்று ஒருவர் என்னை சந்தித்து சோதிட ஆலோசனை கேட்டார். அவரின் ஜாதகத்தில் பத்துக்குடைய கிரகம் புதனின் வீட்டில் அமர்ந்து இருந்தது. பத்துக்குடைய கிரகம் செவ்வாய் கிரகமாக இருக்கின்றது.
பத்துக்குடைய கிரகம் கன்னியில் அமர்ந்து இருக்கின்றது. புதனின் வீட்டில் மூன்று கிரகத்தோடு இருக்கின்றது. புதன்கிரகம் குருவோடு சேர்ந்து இருக்கின்றது. இவர் செய்யும் தொழில் ஏஜென்சி தொழில் செய்கின்றார்.
இவர் பெரியளவில் தொழிலை செய்தாலும் அவரால் ஒரு கடையை தன்னுடைய பெயரில் தொடங்கவேண்டும் என்று நினைக்கின்றார் ஆனால் அவரால் தொழிலை தொடங்க முடியவில்லை. அவரிடம் நல்ல பணமும் இருக்கின்றது அதனை வைத்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்றார்.
அவருடைய ஜாதகத்தில் குருவின் தசா நடக்கின்றது. குரு தசாவில் தன்னுடைய மூளையை வைத்து நிறைய சம்பாதிக்கமுடியும் ஆனால் ஒரு இடத்தில் அமர்ந்து அதாவது கடை போல போட்டுக்கொண்டு சம்பாதிப்பது கடினமாக இருக்கும்.
அவரிடம் நீங்கள் நிறைய சம்பாதிக்கமுடியும் அதே நேரத்தில் நீங்கள் தனியாக தொழிற்சாலை மற்றும் கடைகளை எல்லாம் தற்பொழுது தொடங்கவேண்டாம் கை மாற்றி விடும் வேலையை மட்டும் செய்யுங்கள் என்று சொன்னேன்.
புதனின் வீட்டில் பத்தாவது வீட்டு அதிபதி அமர்ந்தால் அவர் பத்தாவது வீட்டின் காரத்துவதொழிலை செய்யலாம் அதே நேரத்தில் அதனை அவர் ஏஜென்சி தொழிலாக மட்டுமே செய்யவேண்டும். 
நமது அம்மன் கோவில் மறுபடியும் வேலையை தொடங்க இருக்கின்றோம். முதற்கட்டமாக இரண்டு லோடு மணல் மற்றும் 100 மூட்டை சிமெண்ட் தேவைப்படுகின்றது. இதற்கு உதவி செய்பவர்கள் செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
 

 
No comments:
Post a Comment