Followers

Monday, December 2, 2019

சித்தர்கள் பகுதி 1



வணக்கம்!
          ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை உருவாகும்பொழுதே ஆத்மா அதனுள் புகுந்து உடல் எடுக்க வைக்கின்றது. ஆத்மா ஒரு உருவத்தோடு பிறந்து வருகின்றது. நாம் சோதிடத்தில் பிறந்த நேரத்தை மட்டுமே கணக்கில் கொண்டு சொல்லுவோம். ஆத்மா கரு உருவாகும்பொழுதே அது தன்னுடைய பயணத்தை தொடங்கிவிடுகின்றது.

ஒரு குழந்தை எப்படி உருவாகவேண்டும் எங்கு உருவாகவேண்டும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் அது வளரவேண்டும் என்பதைப்பற்றி முடிவு செய்யப்பட்டு வருகின்றது. தாய் தந்தை காரணமாக இருந்து இந்த செயல் நடக்க ஆரம்பிக்கின்றது.

நம்முடைய வாழ்வில நாம் இத்தோடு இந்த பிறவி முடியபோகின்றதா என்ற ஒரு கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் காலத்தில் பல விசயங்கள் தேட ஆரம்பிப்பார்கள். இதனை வைத்து தர்மத்தை சொல்லி வருவார்கள். குழந்தையாக இருக்கும்பொழுது இருந்தே தர்மம் செய்யவேண்டும் என்று சொல்லுவார்கள். நல்லதை மட்டும் செய்யவேண்டும் என்று சொல்லுவார்கள். இது அனைத்தும் முற்பிறவி மற்றும் அடுத்த பிறவியை பற்றி மனதின் கணக்கில் வைத்து சொல்லுவார்கள்.

உடல் வழியாக செய்யும் அனைத்தும் மற்றும் மனது வழியாக செய்யும் காரியங்கள் அனைத்தும் ஆத்மாவிற்க்கு செல்கின்றது என்ற விதியைப்படி சொல்லுவார்கள். உண்மையில் ஆத்மா இதனை எல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு செல்வது போல தெரியவில்லை இதனை எல்லாம் கணக்கு வைத்துக்கொண்டு செல்வதற்க்கு என்று தனியாக ஆள்வேண்டும் என்பது போல தோன்றுகின்றது.

ஆத்மாவிற்க்கு அழிவில்லை என்பார்கள். ஆத்மாவிற்க்கும் அழிவு இருக்கவேண்டும் நம்முடைய அனைத்தும் ஏதோ ஒன்று கணக்கில் வைத்துக்கொள்வதற்க்கு ரெக்கார்ட் ஒன்று இருக்கின்றது. தேவைப்படும் இடத்தில் தேவைப்படும் காலத்தில் அது புதிக்கப்பட்டு இந்த பூமியில் பிறப்பை எடுக்க வைக்கின்றது.

நல்லது கெட்டது பார்த்து பிறப்பை எடுக்க வைக்கின்றது என்பதை விட ஏதோ ஒன்றை சரி செய்ய இந்த பிறப்பை எடுக்க வைக்கலாம். ஒரு தொடர்ச்சியான விசயத்தை சரி செய்வதற்க்கும் இந்த உலகத்தை இயக்க தேவையான ஒரு செயல் செய்வதற்க்கும் இந்த பிறப்பை எடுக்க வைக்கலாம். இந்த பிறப்பில் செய்ய முடியாததை அடுத்த பிறப்பிலும் செய்ய மறுஜென்மமும் எடுக்க வைக்கலாம்.

கஷ்டமோ அல்லது நஷ்டமோ நம்முடைய கையில் இது இல்லை என்று நினைத்துக்கொண்டு நாம் செயல்பட மட்டுமே வந்தோம் என்று நினைத்து செயல்பட்டால் நல்லது என்று நினைத்து செயல்பட ஆரம்பியுங்கள்.

பல பேர் என்னிடம் எதுவும் இல்லை என்று செயல்படாமலேயே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். செயல்படாமல் இருந்தால் எப்படி செயல் நடைபெறும். நம்முடைய செயலை போட்டுவிடவேண்டும் அது வெற்றியோ அல்லது தோல்வியோ என்பதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. செயல் மட்டும் தேங்கிவிடாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.

சித்தர்கள் என்று சொல்லிவிட்டு ஆத்மாவைப்பற்றி எழுதுகிறார் என்று நினைக்கலாம். சித்தர்கள் மற்றும் புண்ணிய ஆத்மாக்கள் சொன்ன அனைத்து விசயத்தையும் வைத்து பார்த்தால் கடைசியில் சேரும் இடம் இதுவாகவே இருக்கும்.

நண்பர்களே மேலே சொன்னது அனைத்தும் என்னுடைய அறிவால் மட்டுமே சொல்லுகிறேன். உங்களின் சிந்தனையில் இதனை வைத்து சிந்தித்து பார்க்கலாம். உங்களுக்கு புதியதாக ஏதாவது தோன்றினால் அதனை என்னிடம் பகிர்ந்துக்கொள்ளலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: