வணக்கம்!
திருமண தடை ஏற்படுவதற்க்குரிய காரணத்தை பார்த்து வருகிறோம். திருமண தடை ஏற்படுவதற்க்குரிய காரணமாக சனிக்கிரகத்தையும் நாம் முதலில் எடுத்துக்கொள்ளலாம். சனிக்கிரகம் மிகப்பெரிய திருமண தடையை ஒருவருக்கு ஏற்படுத்திவிடும்.
சனிக்கிரகம் லக்கினத்தில் இருந்தால் அது ஏழாவது வீட்டை பார்க்கும் இரண்டில் இருந்தாலும் அதுவும் பிரச்சினை அல்லது ஏழில் மற்றும் எட்டில் இருந்தால் திருமண தடை என்பது ஏற்பட்டுவிடும். இந்த வீடுகளில் இருந்தால் குறைந்தபட்சம் முப்பற்றிதைந்து வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள்.
இளம்வயதில் திருமண நடந்தாலும் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதில்லை. நிறைய விவாகாரத்து சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இப்படி தான் இருப்பார்கள். திருமணம் பிடிக்கவிலை என்று சொல்லுபவர்களும் இவர்களாகவே இருப்பார்கள்.
ஒரு சிலருக்கு திருமண ஏற்பாடு செய்யும்பொழுது எந்த பெண்ணையும் அல்லது ஆணையும் பிடிக்கவில்லை என்று சொல்லுவார்கள். தற்பொழுது திருமணம் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.
சனியின் வீடாக லக்கினம் மற்றும் இரண்டாவது வீடு வந்துவிடகூடாது இதுவும் திருமணத்தை தள்ளி போக வைத்துவிடும். ஏழாவது வீடாகவும் மற்றும் எட்டாவது வீடாகவும் சனியின் வீடுகள் வந்துவிடகூடாது.
ஒரு சிலருக்கு மூன்றாவது வீட்டில் சனி இருந்தாலும் திருமணம் தள்ளிபோகின்றது. சனியைப்பற்றி திருமணத்திற்க்கே நிறைய பார்க்க வேண்டியிருக்கின்றது. அவர அவர்களின் ஜாதகத்தை பொறுத்து இதனை பார்த்து நாம் கணிக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment