Followers

Thursday, December 5, 2019

சித்தர்கள் பகுதி 4


வணக்கம்!
          சித்தர்கள் பற்றி நாம் பார்த்து வருகிறோம். ஒரு சிலர் பேசும்பொழுது சொல்லுவார்கள். நான் இந்த சித்தரை நேரில் தரிசனம் செய்தேன். ஒரு சிலர் நான் இத்தனை ஜீவசமாதிகளை தரிசனம் செய்து இருக்கிறேன். ஆன்மீகத்தில் நான் ஒரு பெரிய ஆள் என்று சொல்லாமல் சொல்லுவார்கள். ஒருவர் சித்தரை தரிசனம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் ஒரு சாரார் ஜீவசமாதியை தரிசனம் செய்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

எப்படியோ சித்தரை தரிசனம் செய்தால் போதும் என்று சொல்லுகின்றனர். நாம் அதனைப்பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை முதலில் மனிதனின் ஆத்மாவை தரிசனம் செய்யமுடியுமா என்பதைப்பற்றி பார்க்கலாம். மனிதனின் ஆத்மாவை தரிசனம் செய்யும் பாக்கியம் நமது கண்களுக்கு தெரிகின்றதா அல்லது இந்த பாக்கியத்தையாவது நமக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றான இறைவன் என்று பார்க்கவேண்டும் அதன் பிறகு சித்தர்களின் தரிசனத்தை வைத்துக்கொள்ளலாம்.

எனக்கு தெரிந்ததா அல்லது தெரியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு சமயம் சென்னை கொட்டிவாக்கத்தில் இருக்கும்பொழுது ஒரு குழுவினர் சிறந்த ஆன்மீக தேடுதலை கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் எனக்கு பழக்கம் அவர் என்னிடம் சொன்னது. நான் மனிதனின் ஆத்மாவை பார்க்கவேண்டும் என்பது ஒரு விருப்பம் இதற்க்காக நான் பயிற்சியை மேற்கொண்டேன் என்றார். அவர் ஒரு நல்ல ஆன்மீகவாதி என்பது எனக்கு தெரியும்.

அவரிடம் எப்படி இதனை பார்ப்பது என்று கேட்டேன். அவர் சொன்னார். கடுமையான விரதம் இருந்தேன். தொடர்ச்சியாக பல சிவன் கோவிலுக்கு சென்று வந்தேன். கடைசியில் ஒரு நாள் பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு மனிதனின் ஆத்மா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மாத காலத்தில் இது எனக்கு தெரிந்தது என்றார். அவர் என்னிடம் சொல்லியது. நீங்கள் இதற்க்காக முயற்சி செய்யும்பொழுது ஒரு நல்ல ஆத்மாவின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பித்து அதன் பிறகு இந்த பயிற்சியை மேற்க்கொள்ளுங்கள் என்றார். ஏன் அவர் என்னிடம் அப்படி சொன்னார் என்றால் ஒரு பார்த்தது குறைந்தபட்சம் புண்ணிய செய்த ஆத்மா என்றும் சொல்லிருந்தார்.

பயிற்சி எப்படி 
               பெரியதாக ஒன்றும் இல்லை. உங்களின் மனதில் ஆத்மாவின் தரிசனம் கிடைக்கவேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும். ஒரு மாத காலம் உங்களின் இறைதேடுதல் இதற்க்காக இருக்கவேண்டும். நிறைய நல்ல கோவிலுக்கு சென்று வாருங்கள். இது பெரியதாகவும் இல்லை முடிந்தவரை இது நல்ல பலனை தரும் என்பதை மட்டும் உங்களிடம் சொல்லமுடியும்.

ஆத்மா எப்படி தெரியும் என்பதை நான் சாெல்லிவிட்டால் உங்களின் மனது அதற்கு தகுந்தார்போல் வேடமிட்டு அதனை உருவாக்க நினைக்கும் என்பதால் உங்களிடம் இந்த தகவலை நான் சொல்லவில்லை. இதனை செய்து முடித்து நீங்கள் பார்த்த பிறகு என்னிடம் சொல்லுங்கள் அது சரியா அல்லது இல்லையா என்று உங்களிடம் சொல்லுகிறேன்.

முதலில் நாம் பார்க்க நினைப்பது மனிதனின் ஆத்மாவை அதன்பிறகு நீங்கள் சித்தர்களை தரிசனம் செய்யலாம். மனிதனின் ஆத்மாவை பார்க்க தெரிந்த உங்களுக்கு சித்தர்கள் ஒன்றும் பெரியதாகவே இருக்காது என்று நான் நினைக்கிறேன். இன்று முதல் இதனை தொடங்கலாம். இன்று வியாழக்கிழமை குருவின் நாள் அதனால் இன்று முதல் ஆரம்பியுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: