வணக்கம்!
திருமணத்தடையைப்பற்றி பார்த்து வருகிறோம். திருமண தடை சந்திரன் ஏற்படுத்தும் என்பதைப்பற்றி பார்த்தோம். சந்திரன் கெடும்பொழுதும் திருமணத்தில் பிரச்சினை வரும் அது எப்படிப்பட்டது என்பதைப்பற்றி கொஞ்சமாக பார்க்கலாம்.
சந்திரனோடு சேரும் சனியைப்பற்றி ஏற்கனவே பழைய பதிவில் சொல்லிருப்பேன். இவர்களுக்கு தான் புனர்பூ தோஷம் என்று சொல்லுவார்கள். சனி சந்திரனோடு சேரும்பொழுது மனது கெடும். மனதால் திருமணமும் கெடும். இன்றைய காலத்தில் நிச்சியதார்த்தம் செய்தவுடன் போனில் பேச விட்டுவிடுவார்கள். நம்ம ஆளுங்களும் பேசிகிறேன் என்று நாள் முழுவதும் பேசி உண்மையான விசயத்தை சொல்லிவிடுவார்கள்.
பொய் பேசகூடாது என்று எண்ணி உண்மையை சொல்லிவிடுவார்கள். இவர்கள் சொன்ன உண்மை இவர்களுக்கு ஆப்பு அடித்துவிடும். கடைசியில் இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை இந்த பெண் பிடிக்கவில்லை திருமணத்தை நிறுத்துங்கள் என்று சொல்லிவிடுவார்கள். திருமணமும் நின்றுவிடும். இவர்களுக்கு எல்லாம் சனியின் தொடர்பு சந்திரனுக்கு கிடைத்தால் இப்படி நடக்கும்.
சந்திரனுக்கு இராகு அல்லது கேதுவின் தொடர்பிலும் சிக்கல் இருக்கின்றது. ஒரு சிலருக்கு இவர்கள் வாயால் சொல்லி கெடுவதை விட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லி கெடுத்துவிடுவார்கள். இவர்களுக்கு வெளியில் உள்ளவர்கள் சொன்ன விசயம் திருமணத்தை பாதிக்கும். இப்படியும் கெட்டவர்களும் நிறைய பேர் இருக்கின்றனர்.
சந்திரன் ஒரு சில நேரத்தில் தேய்பிறை அல்லது அமாவாசையில் இருந்தாலும் அவர்களுக்கும் திருமணத்தில் ஒரு சில பிரச்சினையை கிளப்பிவிடுவது உண்டு. உங்களுக்கு சந்திரனால் பிரச்சினை வருகின்றது என்றால் அதுவும் திருமணத்தில் பிரச்சினை வருகின்றது என்றால் நீங்கள் கண்டிப்பாக இந்த பரிகாரத்தில் கலந்துக்கொண்்டு பயன்பெறலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment