Followers

Thursday, December 19, 2019

ஆலய தரிசனமும் சில கருத்துகளும்


வணக்கம்!
          ஆலய தரிசனத்தைப்பற்றி பல நண்பர்கள் தங்களின் விருப்பத்தை வைத்தனர். இந்த கோவில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை நிறைய இடங்களில் மரம் செடிகள் வளர்ந்து வந்திருக்கின்றன. பல இடங்களில் சுத்தம் கூட செய்யவில்லை என்று சொல்லிருந்தனர். இது உண்மையான ஒன்று தான் இதனை நான் பார்த்தேன். நான் அனுப்பிய புகைப்படங்களை வைத்து அந்த கேள்வி வந்தது என்று தெரிகின்றது.

நம்மால் தற்பொழுது அம்மன் கோவில் கட்டும் பணியை மட்டும் செய்யமுடியும் என்ற நிலையில் இருக்கின்றது இதனை தாண்டி இதனை செய்வதற்க்கு இந்த பதிவுகளை வெளியில் பகிர்ந்துக்கொண்டால் சிவனடியார்களின் கண்களில் பட்டு இதனை செய்ய நினைப்பார்கள். இதனை எடுத்து செய்வதற்க்கு என்று ஆட்கள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதனைப்பற்றி சொல்லுங்கள். இதனை சரி செய்வதற்க்கு பணம் உதவி எல்லாம் நீங்கள் செய்யவேண்டியதில்லை இதனை எடுத்துச்செய்யும் ஆட்களுக்கு இதனை தெரியப்படுத்தினால் போதும். நான் தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் நண்பர்களிடம் இதனைப்பற்றி சொல்லியுள்ளேன். மழை நின்றவுடன் இதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லியுள்ளனர்.

நாட்டில் பார்த்தால் நிறைய ஆன்மீகவாதிகள் இருப்பது போன்று தோன்றும் ஆனால் இதனை செய்வதற்க்கு ஆட்கள் இல்லை என்று சொல்லலாம். எதார்த்தம் எப்படி இருக்கின்றது என்பதை நாம் பார்த்து புரிந்துக்கொள்ளலாம். ஆன்மீகம் என்பது ஆன்மீகத்தை சம்பந்தப்படும் கோவில்கள் அனைத்தும் காப்பாற்றுவதற்க்கு நம்மால் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கவேண்டும். எதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கின்றது.

இந்த கோவில்கள் அனைத்தும் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலானா ஒரு கோவில்களாகவே இருக்கின்றன. நாம் அங்கு சென்றால் அதனைப்பற்றி எளிதில் புரிந்துக்கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டியது என்ன என்றால் உங்களுக்கு அருகில் இருக்கும் கோவில்களை பராமரிப்பதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதனை நீங்கள் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: