Followers

Saturday, December 14, 2019

ஆலய தரிசனம் பகுதி 4


வணக்கம்!
          என்ன ஒரே ஆலய தரிசனமாகவே எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். இந்த மாதிரியான கோவில்களை தரிசனம் செய்யவேண்டும் என்பதால் தான் இதனை எழுதுகிறேன். திருவையாறு கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு திருப்பழனம் என்ற கோவிலை தரிசனம் செய்ய சென்றேன். திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் நான் செல்லும்பொழுது ஆலயத்தை மூடிவிட்டார்கள். அங்கு சென்று இராஜகோபுர கதவை பார்த்தேன் திறந்து இருந்தது உள்ளே சென்றேன். 

இராஜகோபுர வாயிலை நானே திறந்தவுடன் ஒரு நபர் வெளியில் இருந்து வந்தார். அவர் என்னை விசாரித்துவிட்டு உள்ளே அழைத்து சென்றார். உள்ளே இருக்கும் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலயத்தை திறந்து அனைத்தையும் என்னிடம் விளக்கி சொன்னார். ஐயர் இருந்தால் கூட எனக்கு அந்த கோவிலைப்பற்றிய விபரம் தெரிந்து இருக்காது அந்தளவுக்கு விபரமாக அனைத்து தகவலையும் சொன்னார்.

திருப்பழனத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் யாரை பார்க்கவேண்டும் என்று நினைக்கின்றார்களாே அவர்கள் தான் இங்கு வரமுடியும் என்று சொன்னார். உண்மையில் அப்படி தான் இருக்கின்றது. நான் அங்கு சென்றப்பொழுது தான் அதனை உணர்ந்தேன். திருப்பழனத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர்  வழிப்பட்டால் அனைத்து ஐஸ்வரியமும் கிடைக்கும். தாயார் பெரியநாயகி என்று அழைக்கப்டுகின்றார். தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலத்தில் இது காவிரியின் வடகரையில் அமைந்த ஐம்பதாவது தலம் என்று சொல்லுகின்றனர்.

இந்த கோவிலை நான் சொல்லுவதை விட இந்த கோவிலுக்கு காலை பத்து மணிக்குள் சென்று தரிசனம் செய்து பாருங்கள் மிக அற்புதமான ஒரு கோவிலாக இருக்கும். இதனை முடித்துக்கொண்டு இதன் அருகில் இருக்கும் சந்திரன் ஸ்தலத்திற்க்கு சென்றேன். திங்களூர் சந்திரன் கோவில் இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டரில் இருக்கின்றது. சந்திரன் ஸ்தலம் சென்று வழிபட்டேன். நவகிரகங்களில் சந்திரனுக்குரிய ஸ்தலம் என்று சொல்லுகின்றனர். இது எனக்கு அந்தளவுக்கு உணர்வு வழியில் பிடிபடவில்லை. 

திங்களூர் சந்திரனை முடித்துக்கொண்டு திருநெய்தானம் என்ற பாடல் பெற்ற ஸ்தலத்தை தரிசனம் செய்ய சென்றேன். திருநெய்தானம் என்பதை தில்லைஸ்தானம் என்றும் அழைக்கின்றனர். இதுவும் நான் சென்ற நேரத்தில் மூடிவிட்டார்கள். காவலாளியை சந்தித்து சொன்னவுடன் அவர் கதவை திறந்து உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார். சுவாமி தரிசனம் தாயார் தாயார் பாலாம்பிகை  தரிசனம் முடித்தேன். திருவையாற்றை சுற்றி இருக்கும் ஏழு ஸ்தலங்களையும் தரிசனம் செய்து முடித்துவிட்டு அங்கிருந்து திட்டை வசிஷ்டர் கோவில் சென்றேன். வியாழக்கிழமை என்பதால் குரு பகவானையும் தரிசனம் செய்தேன். 

இந்த பயணத்தில் எனது பைக்கில் சென்று தரிசனம் செய்த காரணத்தால் அனைத்தையும் விரைவாக மற்றும் எளிமையாக சென்று அடையும் மார்க்கமாக இருந்தது. அனைத்து கோவிலிலும் பணிபுரியும் நபர்களுக்கு பணஉதவியை செய்தேன். இந்த பணம் அனைத்தும் நீங்கள் கொடுத்தது தான் நல்ல உதவியை செய்தேன். வேலை செய்யும் ஒவ்வொருவரும் மனம் மகிழும்படி நான் உதவியை செய்தேன்.

வாட்ஸ்அப்பில் இணைந்த நண்பர்கள் அனைவருக்கும் அன்றே புகைப்படங்கள் மற்றும் வீடியோவாகவும் அனுப்பியிருந்தேன். எனது வாட்ஸ்அப் ( 9551155800) எண்ணில் தொடர்பை வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து ஒரு நல்ல ஆலயத்திற்க்கு செல்லும்பொழுது உங்களுக்கு தகவல் பரிமாறுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: