வணக்கம் நண்பர்களே!
நான் ஒருவரிடம் பல வருடங்களுக்கு முன்பு கடனாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் கடனாக வாங்கியிருந்தேன். அப்பொழுது உள்ள நிலையில் அந்த பணத்தை உடனே திருப்பிக்கொடுக்கமுடியவில்லை. அவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
வட்டிக்கு கொடுக்கும் ஆளிடம் வட்டியில்லாமல் பணம் வாங்கினேன். அந்த பணத்தை கூட திருப்பி கொடுக்காதது எனது தவறு ஆனால் அந்த தவறு செய்ததால் நான் அவரிடம் மறுமுறையும் பணம் வாங்கமுடியவில்லை காரணம் நம்பிக்கை போய்விட்டது அல்லவா. பொதுவாக நாம் இந்த ஜென்மத்தில் எது வாங்கினாலும் அதனை திருப்பி கொடுத்துவிடவேண்டும் எந்த ஒரு கடனையும் நாம் வைத்திருக்ககூடாது.
அவர் நிறைய எனக்கு செய்திருப்பார் நான் செய்த தவறால் மறுமுறை அவரிடம் இருந்து பணம் வாங்கமுடியவில்லை. நம்பிக்கை போய்விட்டால் அவர் எப்படி கொடுப்பார். இதற்கு எல்லாம் காரணம் என்ன என்றால் நமக்கு உள்ள விரைய வீட்டின் காரத்துவம் அப்படி இருக்கும்பொழுது அந்த நேரத்தில் நாம் என்ன செய்யமுடியும்.
கடன் வாங்கும் வீடு ஆறாவது வீடாக இருந்தாலும் அந்த பணம் என்ன ஆகும் என்பதையும் காட்டும் வீடு எப்படிப்பட்டது என்பதை பார்த்தால் அது என்ன என்று தெரியும். பனிரெண்டாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் இருந்தால் இப்படிப்பட்ட பிரச்சினை உருவாகும். நான் இப்பொழுது தான் அந்த பணத்தை திருப்பி கொடுத்தேன்.
பல நண்பர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை கடன் வாங்குவது தவறு இல்லை. அந்த கடனை எப்படியும் திருப்பிக்கொடுத்துவிடுங்கள். திருப்பிக்கொடுக்கவில்லை என்றால் இந்த நேரத்தில் என்னால் திருப்பிக்கொடுக்கமுடியுவில்லை பின்பு தருகிறேன் என்றாவது சொல்லிவிடுவது நல்லது. அந்த வார்த்தைகூட சொல்லவில்லை என்றால் நாம் மாட்டிக்கொள்வோம். பிறரின் வேர்வை துளியில் சம்பாதிக்கும் பணம் நமக்கு ஒட்டாது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
2 comments:
yeppadi 6 avathu veedum 12 avathu veedum onraga irukka mudiyum? Intha article la yetho thavaru irukkirathu
பனிரெண்டாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் இருந்தால் நடைபெறும். சொல்லியதற்க்கு நன்றி நண்பரே
Post a Comment