Followers

Thursday, May 1, 2014

கோரிக்கை


வணக்கம் நண்பர்களே!
                    கேள்வி கேட்டபொழுது தான் எனக்கு ஒரு விசயம் தெரியவந்தது. நமது பதிவில் உள்ளவற்றை அப்படியே கட் அண்டு பேஷ்ட் சமாச்சாரம் எனக்கே தெரியவந்திருக்கிறது. நண்பர் சொன்னவுடன் அங்கு சென்று பார்த்தால் நமது பதிவுகளை அவர்களின் பதிவுகளில் அப்படியே போட்டுள்ளார்கள்.

நான் பல முறை சொல்லியுள்ளேன். எனக்கு பெயர் தேவையில்லை. நான் சொன்னதை அப்படியே நீங்கள் சொன்னது போல் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டத்தில் சொல்லிவிடுங்கள். நீங்களே கண்டுபிடித்து சொல்லுவது போல் சொல்லுங்கள் என்று சொல்லிருக்கிறேன். எதற்க்கு அப்படி சொன்னேன் என்றால் பல பேர் நன்றாக இருக்கட்டும் என்ற காரணத்தால் மட்டுமே அப்படி சொன்னேன். 

நெட்டில் கஷ்டப்பட்டு நான் எழுதியதை அப்படியே காப்பி அடித்து உங்களின் பிளாக்கில் போடுவது என்னை முட்டாளாக மாற்றுவது மாதிரி அல்லவா இருக்கிறது. 

என்னுடைய கருத்தை சொல்லும் தளமான நெட்டிலேயே அதனை பரப்ப வேண்டாம். ஒரு சில தொலைக்காட்சியில் கூட நான் சொன்ன விசயத்தை காப்பி செய்து சொல்லுவதை நமது நண்பர்கள் சொன்னார்கள். வெளியில் சொல்லுங்கள் ஆனால் அதனை சொன்னவன் யார் என்று சொல்லிவிட்டால் நல்லது அல்லவா.

நெட்டில் ஒரு தளத்தில் மட்டும் எனது பதிவை போட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவருக்கு மெயில் செய்து நீக்க சொல்லியுள்ளேன். என்னை விட வயதில் மூத்தவர்கள் இதனை செய்வதால் அந்த தளத்தைப்பற்றி இப்பதிவில் சொல்லவில்லை. இளைஞர்கள் நல்லவர்களாக இருக்கின்றனர். வயதில் மூத்தோருக்கு நான் ஆன்மீகவாதியாக காட்டவேண்டும் என்று நினைக்கின்றனர். அது தவறு இல்லை. சொந்தமாக ஆன்மீகத்தை சொல்லவேண்டும்.

உங்களுக்கு எல்லாம் வேண்டுகோள் என்ன என்றால் எனது கருத்தை சொல்லுங்கள் ஆனால் தளம் உருவாக்கி அதனை பகிர்ந்துக்கொள்ளாதீர்கள். எனக்கு உங்களுக்கு பதிவு கொடுக்கவே நேரம் இல்லை பல பதிவுகளை உங்களுக்கு நான் கொடுக்கவேண்டும். வெளியில் நமது பதிவுகள் வந்தால் உடனே எனக்கு கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Unknown said...

sir pls unga number kudunga

rajeshsubbu said...

வணக்கம் எனது மொபைல் எண் 9551155800. நன்றி