வணக்கம் நண்பர்களே!
ஆன்மீகத்தில் இருப்பவர்களே ஒரு சில விசயத்தில் முட்டாளாக இருப்பார்கள். அட நீ்ங்கள் தான் முட்டாளாக இருக்கின்றீர்கள் அந்த முட்டாள் தனத்தை ஏன் மக்களிடம் பரப்புகிறார்கள் என்று பார்த்தால் அதில் ஒரு உண்மை தெரியும். செய்வினை என்ற முட்டாள் தனத்தை மக்களிடம் பரப்பி பணம் சம்பாதிப்பது ஒரு வழியாக வைத்திருக்கிறார்கள்.
சோதிடம் பார்க்க வரும் நபர்களிடம் உனக்கு செய்வினை வைத்துவிட்டார்கள் என்று சொல்லிவிட்டால் அடுத்த கேள்வி கூட வரும் நபர்கள் கேட்கமாட்டார்கள். அதனை அப்படியே நம்பிவிடுவார்கள் நம் மக்கள். செய்வினை எல்லாம இருந்தால் ஏன் ஒவ்வொரு நாடும் இந்தளவு பணத்தை செலவு செய்து ஆயுதங்களை தயாரிக்கவேண்டும். நான்கு சூன்யகாரர்களை கூப்பிட்டு அடுத்த நாட்டிற்க்கு செய்வினை வைத்துவிடலாம் அல்லவா.
செய்வினை என்று சொல்லியே கிருஸ்துவ மதத்தை வளர்த்ததில் பெரும் பங்கு நமது ஆன்மீகவாதிகளை சேரும். மக்கள் என்ன நினைப்பார்கள் பாவம் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஒருவர் ஒரு இடத்தில் குடி இருந்தால் கண்டிப்பாக அடுத்த வீட்டில் உள்ளவர்களோடு சண்டை சச்சரவு இருக்க தான் செய்யும் அதனை நம்ம ஆட்கள் பயன்படுத்திக்கொண்டு உனது எதிரி உனக்கு செய்வினை வைத்துவிட்டார் என்று சொன்னால் அவன் நம்பதான் செய்வான்.
கேரளாவில் உள்ளவர்கள் முக்கால்வாசி பேர் கிருஸ்துவ மதத்திற்க்கு சென்றதற்க்கு காரணம் செய்வினை என்ற முட்டாள் தனத்தை ஒன்றை வைத்தே சென்றார்கள். கிருஸ்துவ மதத்தில் உள்ளவர்கள் . எங்கள் மதத்திற்க்கு நீங்கள் வாருங்கள் எங்களிடம் செய்வினை இல்லை என்று சொன்னார்கள். மக்கள் பார்த்தார்கள் பரவாயில்லை அங்கேயே சென்றுவிடலாம் என்று மக்கள் சென்றுவிட்டனர். இதில் படித்தவர்கள் கூட விதிவிலககு கிடையாது.
அந்த மதத்திற்க்கு சென்றதால் மக்கள் நன்றாக இருக்கின்றார்களாக என்று மட்டும் கேட்காதீர்கள். உலகத்தில் எந்த மதத்திற்க்கு சென்றாலும் தன் நிலையில் மாற்றம் இல்லை என்றால் அவன் முன்னேற்றம் என்பதை காணமுடியாது.
உங்களுக்கு எல்லாம் சொல்லும் ஒரே செய்தி மனிதனின் கெட்ட எண்ணங்கள் மட்டும் தான் உங்களை தாக்கும் சக்தி வாய்ந்தது பிற எதுவும் உங்களை தாக்காது. இந்த கெட்ட எண்ணங்களை நீங்கள் பார்த்துவிட்டு தான் செய்வினை சூன்யம் செய்துவிட்டார்கள் என்று சொல்லுகிறார்களே தவிர வேறு எதுவும் கிடையாது என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். ஆரோக்கியமான ஆன்மீகத்தை நீங்கள் வளர்க்க பாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
4 comments:
Well said sir... Liked this post !
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
Dear sir
Christian s also believe cheivinai. In many churches people curing pray from pastors
Example Dinakaran meetings
100% TRUE.SUPER MESSAGE...
Post a Comment