Followers

Sunday, May 18, 2014

ராகு கேதுவின் பலம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகமாவது அதிக வலிமை அடைந்து இருக்கும். அந்த கிரகத்தை நாம் பார்த்து அதற்கு தகுந்தார் போல் தன் வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டுவரும்பொழுது உங்களின் வாழ்க்கை சிறக்கும்.

ஒரு ஜாதகத்தில் ராகு கேது அதிகம் பலம் பெற்றுவிட்டால் அவர்களின் வாழ்க்கை முப்பத்தைந்து வயது வரை மிகப்பெரிய அளவில் பிரச்சனையை சந்திக்கும்.  இது காலசர்ப்பதோஷம் என்றும் மட்டும் இல்லை. பொதுவாக அதிகபலன் பெறும்பொழுது அவர்களின் வாழ்க்கை முறைகளை உன்னிப்பாக கவனித்தால் நன்றாக தெரியும்.

முப்பந்தைந்து வயது வரை இவர்கள் படும்பாடு இருக்கின்றதே அதனை எழுத்தில் சொல்லிவிடமுடியாது. உயிரை மட்டும் வைத்துவிட்டு பிறகு உள்ள அனைத்தையும் எடுத்துவிடும். நான் என்ன செய்கிறேன் என்று சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது. அப்படி ஒரு தாக்குதலை ராகுவும் கேதுவும் அவர்களின் வாழ்வில் நடத்தும்.

முப்பந்தைந்து வயது என்று இல்லாமல் நாற்பது வயதிற்க்குள் அவர்கள் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்த இரண்டு வயதிற்க்குள் இடைப்பட்ட காலத்தில் நீங்கள் மாற்றத்தை பார்க்கமுடியும். முப்பந்தைந்து வயதில் முதலில் இருந்து ஏறுமுகமாக தான் இருக்கும்.

இப்படிப்பட்டவர்களை நான் பல பேரை சந்தித்து இருக்கிறேன். இளம் வயதில் எந்தளவுக்கு அவர்கள் பட்டார்களே அதனை அப்படியே பல மடங்கு சந்தோஷத்தை வாரி வழங்கும். மிகப்பெரிய சாதனையாளர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்களாக தான் இருப்பார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, How to find out Ragu and kethu got more power in a horo? Say for an eg;. if lagnathypathy got ucham power and ragu and kethu in 6th and 12th as well, here who will be more power.