வணக்கம் நண்பர்களே!
நேற்று எனது நண்பர் ஒருவர் என்னிடம் பேசும்பொழுது சொன்னார். அவர் இந்த தளத்தின் வழியாக எனக்கு அறிமுகமானவர். அவர் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவர். அந்த கிராமத்தில் அவர் தான் முதன் முதலாக படித்தவர். நல்ல படிப்பை படித்துவிட்டு பெங்களுரில் வேலை செய்கிறார்.
அவரின் கிராமம் படிப்பறிவு இல்லாத கிராமம். நீங்கள் நினைக்கலாம் தமிழ்நாட்டில் நல்லநிலையில் நல்ல கல்வி கிடைக்கிறது என்று நினைக்கலாம். அது தவறு என்று நான் பல முறை சொல்லியுள்ளேன். அதற்கு காரணம் பல கிராமங்களுக்கு நான் நேரிடையாக சென்று சோதிடம் பார்க்கும்பொழுது பார்த்து தெரிந்து வந்து இருக்கிறேன்.
அனைத்து வசதிகளிலும் பின்தங்கிய கிராமங்கள் இன்றும் எத்தனையே இருக்கின்றது. படிப்பிற்க்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. அப்படிப்பட்ட கிராமத்தில் இருந்து வந்தவர். அவர் பெங்களுரில் வேலை செய்தாலும் அந்த கிராமத்தை எப்படியாவது முன்னேற்றம் அடையவைக்கவேண்டும் என்று நினைத்து பல பேர்களுக்கு நல்ல வழியை சொல்லியுள்ளார்.
பெரியவர்களிடம் சொன்னால் அவ்வளவு எளிதில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று சிறியவர்களிடம் சொல்லி அவர்களை படிக்க வைத்திருக்கிறார். பள்ளிப்படிப்பை மட்டும் படிப்பது அதோடு நிறுத்திவிடுவது அல்லது திருமணம் செய்துக்கொண்டு வயல் வேலையை செய்வதாக இருக்கின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களை இவர் கூப்பிட்டு அவர்களை மேற்படிப்புக்கு வழியை சொல்லுவது எல்லாம் செய்து இருக்கிறார்.
இவரை பார்த்துவிட்டு அந்த ஊரில் இருந்து பத்து பேர்க்கு மேல் இன்ஜினியர் படிப்பை தேர்ந்தெடுத்து படித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று சொன்னார். அவர் எனக்கு நீண்ட நாட்கள் பழக்கம் என்றாலும் இடையில் கொஞ்சம் வேலை காரணமாக தொடர்பு இல்லாமல் இருந்தார். நேற்று பேசும்பொழுது என்னிடம் இந்த விபரத்தை எல்லாம் சொன்னார்.
ஒரு முறை அவருக்கு ஒரு பரிகாரம் செய்ய சொல்லிருந்தேன். அது பச்சைபரப்புதல் என்ற குலதெய்வ பரிகாரம். அவருக்கு நல்ல வாய்ப்பை தந்தது. இவர் என்னிடம் நேற்று பேசும்பொழுது என்னிடம் ஒரு உதவியை கேட்டார்.
அந்த உதவியை நினைத்து நான் இறைவா என்னை படைத்த நோக்கத்தை அறிந்துக்கொண்டேன் என்று அந்த இறைவனுக்கு நன்றியை சொன்னேன். ஒவ்வொருவரும் அவர்களின் தேவைக்கு தானே என்னிடம் வருவார்கள். இவர் கேட்டது உங்களின் அம்மனை வைத்து எங்க கிராமத்தில் உள்ளவர்களை நல்ல நிலைக்கு உயர்த்த பிராத்தனை செய்துக்கொடுங்கள் என்று கேட்டார். யார் இந்தமாதிரி கேட்கமுடியும்.
ஜாதககதம்பத்தில் நீங்கள் சொல்லும் விசயத்தை எல்லாம் எங்க ஊரில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். அதனை முடிந்தளவுக்கு தெரியப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று சொன்னார்.
அவர்களின் கிராமத்தில் உள்ளவர்கள் நன்றாக படிக்கவேண்டும் அதற்கு அம்மனிடம் பிராத்தனை வையுங்கள் என்று சொன்னார். நான் அவரிடம் கண்டிப்பாக செய்கிறேன் என்று சொன்னேன்.
உங்களிடம் நான் ஒன்றை கேட்கிறேன் உங்களின் கிராமத்தை என்றைக்காவது சென்று பார்த்து இருக்கிறீர்களா அந்த கிராமத்தில் உள்ள படிக்கும் குழந்தைக்கு எதாவது செய்து இருக்கிறீர்களா என்று சிந்தனை செய்து பாருங்கள். நீங்கள் பண உதவி செய்ய வேண்டியதில்லை இப்படி எல்லாம் இங்கு வாய்ப்பு இருக்கிறது இந்த வழியில் வா என்று சொன்னாலே போதும். அவர்கள் அந்த வழியை பின்பற்றி வருவார்கள். இதனையாவது நீங்கள் செய்யுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Sir, I am new to this blog. Can you please tell about Pachai paraputhal kuladeiva Pariharam.
Thank u
வணக்கம்
பழைய பதிவுகளில் இதனைப்பற்றி நிறைய எழுதியுள்ளேன். பதிவில் தேடி படித்து பாருங்கள்.
நன்றி
Post a Comment