வணக்கம் நண்பர்களே!
ஆன்மீகம் என்பது வழிபாடு மட்டும் அல்ல உடற்பயிற்சியையும் சேர்த்து ஆன்மீகத்தை தந்தது நமது மதம். யோகா என்பதும் ஒரு வித உடற்பயிற்சி தான். ஆன்மீகம் ஆத்மா சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல அது உடலையும் சுத்தப்படுத்தி ஆத்மாவையும் சுத்தப்படுத்தி கொண்டு சேர்ப்பதற்க்காக உருவாக்கப்பட்ட ஆன்மீகம் இந்துமத ஆன்மீகமாக தான் இருக்கும்.
உடல் நல்ல உடற்பயிற்சியை செய்யும்பொழுது ஆத்மாவை தொடுவது மிக எளிதாக இருக்கும். பல பேரை நான் பார்த்து இருக்கிறேன். உடலுக்கு உடற்பயிற்சி செய்வது கிடையாது. உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் உடலில் அதாவது நரம்புகளில் முடிச்சு விழுந்துவிடும். இரத்தஓட்டம் பாதிப்படையச்செய்யும். நோய் வந்துவிடும்.
உடல் அழகுக்கு மட்டும் அல்ல உடற்பயிற்சி உங்களின் ஆத்மாவை அழகாக வைப்பதற்க்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கு மற்றும் தினமும் வீட்டில் பூஜை செய்வதற்க்கு முன்பு உடற்பயிற்சி செய்யவேண்டும். அதனை செய்த பிறகு அமைதியாக அமர்ந்துவிட்டு பிறகு குளித்துவிட்டு பூஜையை தொடங்கினால் உங்களின் பூஜை மிக எளிதாக தெய்வங்களை போய் சேரும். முதன் முதலில் இப்படி செய்யும்பொழுது நல்ல தூக்கம் வரும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல நிலைக்கு திரும்பமுடியும்.
சின்ன சின்ன உடற்பயிற்சியை முதலில் செய்யுங்கள் பிறகு உடற்பயிற்சியை அதிகரித்துக்கொண்டு செய்துக்கொள்ளலாம். பல உடற்பயிற்சிகளைப்பற்றி இப்பொழுது நெட்டில் இருக்கின்றது அதனை தேடிப்பிடித்து பார்த்துக்கொள்ளுங்கள். நான் சொல்லுவது போல் ஒரு முறை செய்து பார்த்தாலே தெரியும். இதில் உண்மை இருக்கிறது என்பது புரியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Thoppukaranam podalama?
Post a Comment