வணக்கம் நண்பர்களே!
கிரகங்களை பார்த்து நாம் கோபம் கொள்ளகூடாது. நாம் செய்த தீயவினைகளை நமக்கு தரும் வேலையை மட்டும் அவர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பார்த்து இந்த கிரகத்தால் நமக்கு பிரச்சினை என்று கோபம்கொள்வதில் அர்த்தம் இல்லை.
பிற மதங்களைவிட நம் மதத்தில் கர்மவினைக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் நடக்கும் நன்மையும் தீமையும் அவன் செய்த செயலால் மட்டுமே என்று சொல்லியுள்ளார்கள்.
நமது கடவுளிடம் நாம் எந்த பிரத்தனையும் வைக்கமுடியாது. நமது கர்மவினையை குறைக்க வழியை ஏற்படுத்தி தாரும் என்று வைத்தால் நல்லது. கர்மவினை குறைய குறைய நாம் வேண்டியது நமக்கு கிடைக்கும்.
ஒருத்தருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அவர் மனதில் வேலை கிடைக்கவேண்டும் என்று எண்ணி அவரின் கர்மாவை குறைப்பதற்க்கு அவர் கோவிலுக்கு செல்லும்பொழுது அவரின் கர்மா குறைந்து அவருக்கு வேலை கிடைக்கும்.
உலகத்தில் இருக்கும் விசயங்களை அனைத்தும் ஒருவித கணிதம் தான். நமது கணக்கில் என்ன இருக்கிறது என்பதை ஜாதகம் காட்டும். அந்த ஜாதகத்தில் நமக்கு தப்பிதற்க்கு என்ன வழி இருக்கிறது என்பதையும் ஜாதகம் காட்டும். நமது கணக்கில் அதிகம் பாவம் சேர்ந்து இருந்தால் அதனை குறைத்தால் நல்லது என்று எண்ணி நாம் வழிபாட்டை செய்து கொள்ளவேண்டும்.
வழிபாடு மட்டும் இல்லை பல வழிகள் இருக்கின்றன. எத்தனை வழிகள் இருக்கின்றனவாே அத்தனையும் நாம் முயற்சித்து பார்த்துவிடவேண்டும்.அப்படி முயற்சிக்கும்பொழுது நமக்கு வழியை கிரகங்களே ஏற்படுத்திக்கொடுத்துவிடும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Enna enna muraikalil nam karmaavai kuraikkalaam? Vilakkama sollunga.enakku 'sakthi'padhivu podunga.
கர்மவினை ஒரு புறம் இருக்க மூதாதையர் பெற்ற சாபம் பற்றி உங்கள் கருத்து என்ன? ஒருவரின் தாத்தா ஒரு கர்ப்பினிப்பெண்ணை வெட்டிக் கொன்று விட்டார். அந்தப் பெண் இறக்கும் போது ஏதோ சாபம் போட்டு விட்டாளாம். அந்தப் பேரப் பிள்ளைகள் ஒவொருவரும் துர்மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை ஒரு குடும்பத்தில் பேர் வரையில் இவ்வாறு இறந்து விட்டனர். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? பெரப்பிள்ளைகளின் பிள்ளைகளும் நிம்மதி இல்லாது ஏதோ வகையில் தவிக்கிறார்கள். இதற்கு பரிகாரம் உண்டா? உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். நன்றி.
Post a Comment