Followers

Friday, September 19, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
நண்பரின் கேள்வி
அடுத்தவர்களின் பூஜையை எடுத்து வேறு காரியங்களுக்கு பயன்படுத்திகொள்வேன் என்று கூறியுள்ளீர்கள். அப்படி பயன் படுத்தும் போது அந்த பலன் அவர்களுக்கு கிடைக்காது அப்படிதானே. 

அதன் விளைவாக கர்ம வினை நம்மை அல்லவா தாக்க வேண்டும். ஆனால் நீங்கள் கர்மவினை அவர்களை சேரும் என்று கூறுகிறீர்கள்.
அதுதான் எனக்கு புரியவில்லை?

எடுத்துக்காட்டாக சேகர் என்பவர் உங்களுக்கு பூஜை செய்துக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.அந்த பூஜை பயன்படுத்தி மணி என்பருக்கு ஒரு தீங்கை செய்கிறோம் என்று வைத்துக்கொண்டால் மணி என்பவருக்கு பிரச்சினை வந்துவிடும். உங்களுக்கு நடைபெற்ற பூஜை உங்களுக்கு பலனை தராது. மணி தனக்கு ஏன் பிரச்சினை வருகிறது என்று ஒரு ஆன்மீகவாதியை நாடி பார்த்தால் சேகர் என்பவர் உங்களுக்கு கெடுதல் செய்து இருக்கிறார் என்று தெரியவரும். மாட்டுவது சேகராக இருக்கும்.

எங்களின் வேலை பூஜையை திருடுவது மட்டுமே. அந்த கதையில் நான் யார் என்பது கடவுளுக்கே தெரியாது. இது எல்லாம் மிகவும் பெரிய அளவில் ஆன்மீகத்தில் கரை கண்டு இருக்கவேண்டும். இது எல்லாம் அதிபயங்கரமான ஆன்மீக விளையாட்டு.

நாம் நேரிடையாக பூஜை செய்து பிறரை தாக்கினால் அந்த கர்மம் நம்மை சேரும். இப்படி அடுத்தவர்களின் பூஜையை எடுக்கும்பொழுது அந்த கர்மா பூஜை செய்கின்றவரை சேரும்.

எனது பூஜையை ஒருவர் ஒரு வாரக்காலம் திருடினார். ஒரு வாரத்திற்க்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது. அதன் பிறகு அவருக்கு பாடம் கற்பித்து நான் யார் என்று காண்பித்தேன். இது எல்லாம் வில்லங்கமான வேலை தான் என்ன செய்வது தொழில் என்று வந்துவிட்டால் அனைத்தையும் செய்து தான் ஆகவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: