Followers

Tuesday, September 23, 2014

விரதம்


வணக்கம் நண்பர்களே!
                      எங்கள் வீட்டில் எந்த ஒரு விரத்தையும் அனுசரிக்கப்படுவதில்லை. தை அமாவாசை மட்டும் விரதம் இருந்தார்கள். சாதாரண நாளில் நாங்கள் விரதம் இருப்பதில்லை. நான் சொல்லி ஆடி அமாவாசை அன்று விரதம் இருப்பார்கள்.

எங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாடு மட்டும் நடைபெறும். அதற்கு விரதம் இருக்க தேவையில்லை. உங்களை போட்டு அதிகம் வருத்திக்கொள்ள தேவையில்லை. குலதெய்வ வழிபாடு மற்றும் வருடத்திற்க்கு இரண்டு முறை அமாவாசை விரதம் இருந்தால் போதும். அதிகமாக பித்ரு தோஷம் இருந்தால் அவர்கள் மாதம் மாதம் வரும் அமாவாசை அன்று விரதம் இருக்கலாம்.

கண்ட கண்ட பரிகாரங்களை செய்துக்கொண்டு இருப்பதை விட ஒரு வழிபாடு மட்டும் செய்து வந்தால் போதுமானது. அந்த ஒரு வழிபாடு உங்களை உயர்த்தும்.

சோதிடர்களின் வேலை ஏதாவது ஒரு பரிகாரத்தை சொல்லிக்கொண்டே இருப்பது. அனைத்தையும் நீங்கள் செய்துக்கொண்டு இருந்தால் உங்களின் முழு நேரமும் வீணாக போய்விடும். நேரத்தை உழைப்பில் காண்பிக்கவேண்டும்.

கடவுள் வழிபாடு வேண்டாம் என்று சொல்லவில்லை. காலையில் வேலைக்கு போகும்பொழுது ஒரு ஐந்து நிமிடம் பூஜையறையில் பிராத்தனை செய்துவிட்டு சென்றால் போதுமானதாக இருக்கும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: