வணக்கம் நண்பர்களே!
பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒரு காலத்தை அவர்களுக்கு வைப்பேன். அந்த காலத்திற்க்குள் அவர்கள் செய்துவிட்டால் அவர்களை தன்னோடு வைத்துக்கொள்வது அப்படி இல்லை என்றால் அவர்களை ஒதுக்கிவிடுவது எனது முதல் வேலையா இருக்கும்.
நீங்கள் ஒருவரை சந்திக்க வரச்சொல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் நீங்கள் சொன்ன தேதிக்கு வரவில்லை என்றால் நீங்கள் அந்த நபரிடம் நீங்கள் நினைக்கும் வேலையை கொடுக்ககூடாது. அதனை மீறி அவரிடம் கொடுத்தால் அது தவறாக தான் முடியும்.
காலத்தின் மீது நான் நிறைய நம்பிக்கை வைப்பவன். சொன்ன தேதியில் நான் நடத்திக்கொடுப்பேன். அதைப்போல் சொன்னபடி அவர்கள் நடந்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவன். என்னிடம் வருபவர்களிடம் சொல்லும் வார்த்தை இது தான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருவர் என்னை சந்திக்க வந்தார். அவர் கேட்ட ஒரு விசயத்திற்க்கு நான் சொன்னது இந்த தேதியில் எனக்கு நீங்கள் பணம் கட்டவேண்டும் என்று சொன்னேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டு சென்றவர். அந்த தேதியில் எனக்கு பணம் கட்டவில்லை. மறுநாள் என்னிடம் தொடர்புக்கொண்டு பேசினார் இன்றைக்கு நான் பணம் கட்டலாமா என்று கேட்டார். அவரிடம் நான் இனிமேல் எந்த நாளும் நீங்கள் எனக்கு பணம் கட்ட தேவையில்லை. வேற ஆளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
அவர் தொடர்ந்து ஏன் சார் என்ன என்று கேட்டார். காலம் என்ற கடவுள் உங்களுக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்ற தீர்மானித்துவிட்டது அதனால் நீங்கள் வேற ஆளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
சொன்ன நேரத்திற்க்கு சொன்னபடி நடந்தால் காலம் நம்மோடு அவரை இணைக்கிறது என்று அர்த்தம். அப்படி நடக்கவில்லை என்றால் நம்மை காலம் பிரிக்கிறது என்று அர்த்தம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment