Followers

Saturday, September 20, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!

ஐயா வணக்கம்,

கர்மவினை ஒரு புறம் இருக்க மூதாதையர் பெற்ற சாபம் பற்றி உங்கள் கருத்து என்ன? ஒருவரின் தாத்தா ஒரு கர்ப்பினிப்பெண்ணை வெட்டிக் கொன்று விட்டார். அந்தப் பெண் இறக்கும் போது ஏதோ சாபம் போட்டு விட்டாளாம். அந்தப் பேரப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் துர்மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். 

இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளும் நிம்மதி இல்லாது ஏதோ வகையில் தவிக்கிறார்கள். இதற்கு பரிகாரம் உண்டா? உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
நன்றி.

இதனைப்பற்றி நான் பூர்வபுண்ணியத்திலேயே எழுதியுள்ளேன். இந்த காலத்தில் தான் மக்கள் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள். இருபது வருடத்திற்க்கு முன்பு எல்லாம் மக்கள் இந்த மாதிரி பழிவாங்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஒருவரை நாம் கொல்லும்பொழுதும் அல்லது அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் துன்புறுத்தும்பொழுதும் கண்டிப்பாக சம்பந்தப்பட்டவரின் ஆத்மா பாதிக்கப்படும். அந்த ஆத்மா கண்டிப்பாக இப்படி பழிவாங்கும். 

இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட ஆத்மாவை சாந்தப்படுத்த வேண்டும். ஆத்மா சாந்தப்படுத்த பல வழிகளை இப்பொழுது உள்ள புரோகிதர்கள் செய்கிறார்கள். அவர்களை வைத்து இதனை செய்யலாம்.

நீங்களே செய்யவேண்டும் என்றால் அமாவாசை அன்று விரதம் இருக்கும்பொழுது சம்பந்தப்பட்ட ஆத்மாவிற்க்கும் சேர்ந்து விரதத்தை நாம் எடுத்துக்கொள்கிறேன் என்று சங்கல்பம் செய்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: