வணக்கம் நண்பர்களே!
ராகு கிரகத்திற்க்கு ராகு காலம் ஒதுக்கப்பட்டாலும் அமாவாசை நெருங்கும் நேரம் மற்றும் அமாவாசை அன்று அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். எனக்கு தெரிந்த பல நண்பர்களின் ஜாதகத்தில் ராகு கிரகத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் நண்பர்களுக்கு அந்த நேரத்தில் நல்லதும் கெட்டதும் அதிகமாக நடைபெறும்.
ஒரு நண்பருக்கு ராகுவும் சூரியனும் சேர்ந்து இருந்தது அவரிடம் நான் சொல்லி வந்தேன். அமாவாசை நெருங்கும் நேரத்தில் வண்டியில் செல்லாதே என்று சொல்லிருந்தேன். என்னபா இந்த காலத்தில் வண்டியில் செல்லாதே என்று சொன்னால் எப்படி பிழைப்பை நடத்தமுடியும் என்று கேட்டான்.
ஒரு அமாவாசை அன்று காலையில் ஹர்ட் அட்டாக்கில் இறந்துவிட்டான். அமாவாசை தாக்கம் அதிகம் இருந்தாலும் அனைவரும் அதில் சிக்குவதில்லை பெரும்பாலும் ராகு கிரகத்தித்தின் காரத்துவம் அதிகம் இருக்கும் ஜாதகருக்கு அந்த நாள் பெரும் பிரச்சினையை தரும்.
அமாவாசை மட்டும் இல்லை தேய்பிறையில் வரும் சந்திராஷ்டமும் இவர்களுக்கு பிரச்சினை தருவதாக இருக்கும். சந்திராஷ்டம் வரும் நாளிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.சந்திராஷ்டமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் உயிருக்கு கூட வினை வைத்துவிடும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment