வணக்கம் நண்பர்களே!
ஒரு குரு நமக்கு உபதேசம் கொடுக்கும்பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தை நம்பிக்கையை இறைவனிடம் வைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.
நாம் தினமும் நிறைய பிரச்சினையில் சிக்கி தவிக்கலாம். அப்படி தவிக்கும்பொழுது நாம் பிற மனிதர்களை நம்பி இருப்பதைவிட கடவுளை நம்பி இருக்கவேண்டும். படைத்தவனுக்கு உனக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று தெரியும். உனக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்துவிடுவான் என்று குரு சொல்லுவார்.
நான் நிறைய சந்தர்பத்தில் பிரச்சினையை சந்திக்கும்பொழுது நம்முடைய முயற்சியும் இருக்கவேண்டும் என்று பிறரை நம்பி இருப்பேன். அதாவது பிறரை நாடி ஒடுவேன். அப்பொழுது எல்லாம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
இப்பொழுது எல்லாம் ஆயிரம் சதவீதம் அம்மனை மட்டும் நம்புவது அடுத்தப்படியாக குருவை நம்புவது வேறு எதையும் நம்புவது கிடையாது. ஏன் இப்படி செய்கிறேன் என்றால் அம்மனை நம்பும்பொழுது அனைத்தையும் அதுவே செய்கிறது. நமது பிரச்சினை எல்லாவற்றையும் தீர்த்துவைக்கும்பொழுது நம்பாமல் இருக்கமுடியுமா?
நீங்கள் ஒரு தெய்வத்தை நான் நம்புவது போல் தான் நம்பவேண்டும். அப்படி நம்பிவிட்டால் உங்களின் பிரச்சினைகளை கண்டிப்பாக அந்த தெய்வம் வந்து தீர்த்துவைக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Ellam eesan seyal
Enakku mika mika piditha padhivu.
Post a Comment