வணக்கம் நண்பர்களே!
உழவன் இரயில் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறேன். அம்மன் பூஜைக்காக ஊருக்கு சென்றுக்கொண்டு இருக்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வயல்கள் அனைத்திலும் ஆற்று நீர் பாய்ந்து பார்ப்பதற்க்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது.
நான் பலமுறை சொல்லியுள்ளேன். மாந்தீரிகத்தை எல்லாம் நம்பாதீர்கள் என்று ஆனால் பல பேர் அது உண்மை தான் என்று இன்றும் நம்பிக்கொண்டே இருப்பது தான் வேதனை.
தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் நல்ல ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். அவருக்கு தெரியாத ஆன்மீகவாதிகள் இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு இருந்தார். செய்த தவறை அனுபவிக்கவேண்டும் என்று ஆன்மீகத்தில் இருந்தாலும் மாந்தீரிகத்தில் அப்படி இல்லை தவறை மறைக்கமுடியும் என்பார்கள்.
அவர் நினைத்து இருந்தால் நெட்டில் உலாவும் எத்தனையோ மாந்தீரிகரை வைத்து நீதிபதியை வசியம் செய்து இருக்கலாம். அவர் அதனை செய்யவில்லை காரணம் மாந்தீரிகம் என்பது இந்த காலத்தில் இல்லை என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது.
உண்மையான ஆன்மீகம் தவறை ஏற்றுக்கொண்டு அதனை அனுபவிக்கும். அதனை தான் அவர் செய்திருக்கிறார். தேவையில்லாமல் பணத்தை அவர் இழக்க விரும்பாமல் புத்திசாலியாக அவர் இருந்திருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட சிக்கல் போல் எத்தனையோ பேருக்கு ஏற்பட்டு இருக்கும். நாம் உடனே சென்று அவரை வசியம் செய்துவிடுங்கள் என்று ஓடி பணத்தை இழந்துவிடுவோம்.
வசியம் என்பது உண்மை என்றால் தீர்ப்பு சொன்னவரை மயக்கி இருக்கலாம் அல்லவா. அப்படி ஒன்று இல்லை என்று நான் சொன்னால் கேட்கிறீர்களா
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment