Followers

Thursday, April 23, 2015

பெற்றோருக்கு


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்தை இந்த உலகம் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றது. சில பேர் கவனிக்கிறார்கள் பல பேர் கவனிப்பதில்லை.

தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளை கஷ்டப்படகூடாது என்று ஒவ்வொரு அப்பனும் கவலைப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள். அதில் அவர்களின் பிள்ளைகளை நல்ல சொகுசாக வாழவைக்கிறார்கள். சொகுசாக வளரும் பிள்ளைகளுக்கு தன் வாழ்வை சீராக வைத்துக்கொள்ள தெரியவில்லை அல்லது கற்றுக்கொடுக்கப்படுவதில்லை என்று எனக்கு ஒரு சிலரை பார்க்கும்பொழுது தோன்றுகிறது.

சொகுசாக வளரும் பிள்ளைகள் உலகத்தை கையாளும் விதத்தில் தோல்வியை தழுவுகிறது. உலக அறிவை கையாள கற்றுக்கொடுப்பதில்லை.

எங்கள் பகுதியில் செட்டியார் கடை இருக்கும் அந்த கடை முதலாளி தன் பிள்ளையை அடுத்த செட்டியார் கடையில் வேலை பார்க்க வைப்பார். தொழிலை அப்பொழுது தான் அவன் கற்றுக்கொள்வான் என்று அப்படி செய்வார்கள். செட்டி பிள்ளை கெட்டி பிள்ளை என்பார்கள்.

ஒரு சிலர் சொல்லுவார்கள் என் பிள்ளை கெட்டிகாரபிள்ளை என்பார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகள் வயதான காலத்தில் தன் பெற்றோருக்கு சோறுபோடுவதில்லை. ஏன் என்றால் மனைவி பேச்சை கேட்டுக்கொண்டு பெற்றோரை கவனிப்பதில்லை.

ஒரு சில இடத்தில் நான் கண்டதை உங்களிடம் சொல்லுகிறேன். இது உங்களுக்கு பிடித்திருந்தால் பின்பற்றி பாருங்கள். நல்ல சொத்து வசதி வாய்ப்பை ஒரு பையனுக்கு ஒரு அப்பன் சேர்த்து வைத்திருந்தால் அந்த சொத்தை அவன் அனுபவிப்பதில்லை. யாரோ ஒருத்தன் வந்து அனுபவித்துவிட்டு செல்லுகிறான்.

முக்கால்வாசி குடும்பங்களில் பையனின் மாமனார் வீட்டில் உள்ளவர்கள் வந்து அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு சாப்பாடு கிடைக்கமாட்டேன்கிறது. 

அவன் அவன் சம்பாதித்தை அவனே அனுபவிக்கவேண்டும். உங்களின் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்காதீர்கள்.நல்ல கல்வியை கொடுங்கள். நீயே இந்த உலகத்தில் சம்பாதித்துக்கொள் என்று சொல்லிவிடுங்கள்.

சொத்தை கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அந்த சொத்தைப்பற்றிய விபரத்தை பையனிடம் சொல்லாமல் அவனை உழைக்க வையுங்கள். கடைசி காலத்தில் அவனிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள். நான் சொன்னதை அப்படியே நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டாம். உலகத்தை பார்த்துவிட்டு ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு