Followers

Thursday, May 28, 2015

சனிதசா பரிகாரம்


வணக்கம்!
          சனித்தசாவைப்பற்றி நிறைய கேள்விகள் வந்தன. அவ்வப்பொழுது அதனைப்பற்றியும் பார்த்துவிடலாம். முதலில் உங்களுக்கு சனிதசா நடந்தால் எப்படிப்பட்ட பரிகாரத்தை நீங்கள் செய்யவேண்டும் என்பதை சொல்லிவிடுகிறேன்.

ஒவ்வொரு பரிகாரமாக பார்க்கலாம். முதலில் ஒரு பரிகாரத்தைப்பற்றி சொல்லிவிடுகிறேன். முதல் பரிகாரம் தாடி வளர்ப்பது. பொதுவாக சனிக்கிரகம் கிழத்தன்மை உடைய ஒரு கிரகம். சனிதசாவில் நீங்கள் எப்படிப்பட்ட பெரிய பியூட்டி பார்லருக்கு சென்றாலும் நீங்கள் அவ்வளவு அழகாக தெரியமாட்டீர்கள்.

தாடி வளர்ப்பது ஒரு வறுமையின் சின்னமாகவே கருதப்படுகிறது. சனி தசாவில் உங்களுக்கு கஷ்டம் அதிகமாக தெரிகிறது என்றால் நீங்கள் தாடி வளர்த்துக்கொள்ளுங்கள்.

தாடி ஒருவர் வளர்க்கிறார் என்றால் அவர் ஒரு சாமியாராக இருக்கவேண்டும் அல்லது ஏதாவது ஒரு கோவிலுக்கு மாலை அணிந்துக்கொண்டு செல்பவராக இருக்கவேண்டும். ஒருவரின் மனைவி கர்ப்பமாக இருந்தால் அவர் தாடி வளர்க்கலாம். 

சனித்தசா உங்களுக்கு நடந்துக்கொண்டு இருந்தால் தாடி வளர்த்து பாருங்கள். அது உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது என்றால் தாராளமாக சனிதசா முழுவதும் வைத்துக்கொள்ளுங்கள். தாடி வளர்த்தும் பிரச்சினை ஓயவில்லை என்றால் தாடியை எடுத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: