Followers

Monday, May 18, 2015

தன்னம்பிக்கை


வணக்கம்!
          பல நண்பர்களுக்கு நான் நிறைய செய்துக்கொடுத்து இருக்கிறேன். பலருக்கு நல்லது செய்துக்கொண்டு இருக்கிறேன். என்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கு எப்படியாவது நல்லதை செய்யவேண்டும் என்று தான் நினைப்பேன்.

அம்மனை வைத்து செய்துக்கொடுத்தாலும் வாங்கிறவன் கொஞ்சம் திறமைசாலியாக இருக்கவேண்டும். திறமை இல்லை என்றால் அம்மன் கொஞ்ச நாள் பார்க்கும் இவன் நோஞ்சானாக இருக்கிறான் இவனிடம் நாம் இருந்தால் நம்ம ஆளுக்கு வருமானம் குறைவு என்று வந்துவிடும்.

உங்களிடம் நான் சொல்லுவது வாய்ப்பு இல்லை. எனக்கு வாய்ப்பு இருந்தால் நான் நன்றாக ஓடிவிடுவேன் என்று நினைப்பவர்கள் என்னை தேடி வந்தால் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். வாய்ப்பு கொடுத்தும் அதனை பயன்படுத்த தெரியவில்லை என்றால் நான் எதும் செய்யமுடியாது.

திறமைசாலியாக இருந்துக்கொண்டு கிரகங்கள் தடுப்பதால் என்னால் ஓடமுடியவில்லை என்று சொன்னால் அந்த கிரகத்தை நாம் மாற்றி ஒடவைத்துவிடலாம். ஓடவும் நீங்கள் தான் சார் வரவேண்டும் என்றால் நான் என்ன செய்வது? என்னிடம் நீண்ட கியூ இருக்கிறது. அத்தனை பேருக்கும் நானே ஓடுவது முடியாதா காரியம்

மனிதன் சோரம் போககூடாது. இருக்கின்ற இடத்தில் இருந்து எழுவற்க்கு வழி செய்யவேண்டும். உங்களை பிடித்து ஒருவன் கீழே தள்ளுகிறான் என்றால் கீழ் இருந்து மேலே எழும்பொழுது ஒரு கல்லாவது எடுத்துக்கொண்டு எழவேண்டும்.

இவன் வீணாக போய்விட்டான் என்று மட்டும் பேர் வாங்காதீர்கள். எப்படியாவது நான் சாதித்துவிடுவேன். நான் திறமைசாலி என்று பேர் எடுங்கள். அம்மன் உங்களுக்கு வேகமாக உதவ ஆரம்பிக்கும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: