வணக்கம்!
வருகின்ற 10 ஆம் தேதிக்குள் அம்மன் பூஜை நடத்தப்படும். அம்மன் பூஜைக்கு என்று காணிக்கையை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.
நமது நண்பர்கள் அவர்கள் வேலை செய்யும் கம்பெனியில் ஏதாவது ஒரு மேலே உள்ள அதிகாரி திட்டினால் கூட உடனே எனக்கு ஒரு போன் செய்து எனது அதிகாரி என்னை திட்டுகிறார் என்று சொல்லுவார்கள். ஒரு சிலர் அழுவது கூட உண்டு.
பெரிய நகரத்தில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருக்கும் சோதிடனை பாருங்கள். கிளி சோதிடம் சொல்லுபவனே பாருங்கள். அவன் எந்தளவுக்கு ஒரு தன்னம்பிக்கையோடு இருக்கிறான் என்று பாருங்கள்.
அவனுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கும் அவனின் வருமானம் தினமும் எடுக்கவேண்டும். வருமானம் வரும் என்று நம்பிக்கையே இல்லாத ஒரு தொழிலில் தன்னம்பிக்கையோடு வரும் என்று உட்கார்ந்திருக்கிறான் அல்லவா அந்த தன்னம்பிக்கைக்கே அவனுக்கு பணம் வரும்.
நன்றாக படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கும் உங்களுக்கு கண்டிப்பாக பணம் வரும் என்று நிலை இருக்கும்பொழுது மேல் அதிகாரி திட்டனால் உடனே கோபம் வருகின்றது. இந்த உலகத்தில் கஷ்டமே இல்லாமல் வாழ்க்கை எல்லாம் பாேகாது அதனால் உங்களுக்கு எந்தவித பிரச்சினை வந்தாலும் இது எல்லாம் பிரச்சினையே இல்லை என்று செயல்படுபவர்களுக்கு இந்த உலகமே வசப்படும்.
தைரியம் வரவேண்டும் என்றால் முருகனை வணங்கி வாருங்கள். உங்களுக்கு வரும் பிரச்சினை எல்லாம் விலகி நீங்கள் வெற்றி நடைபோடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment