வணக்கம்!
திருமணப்பொருத்தம் பார்க்கும்பொழுது ரஜ்ஜி பொருத்தம் என்ற ஒரு பொருத்தம் பார்ப்பது உண்டு. இது ஒருவரின் தாலிபாக்கியத்தை காட்டக்கூடிய ஒரு பொருத்தம். பொதுவாக திருமணப்பொருத்தம் என்பது நட்சத்திரத்தை வைத்து பார்க்ககூடிய பொருத்தமாக இருக்கும். அவர் அவர்களின் ஜாதகத்தை வைத்து பார்த்தால் தான் உண்மையான நிலையை கண்டறியமுடியும்.
ரஜ்ஜி பொருத்தம் என்பது தாலிபாக்கியத்தை காட்டக்கூடிய ஒரு பொருத்தம். தாலிபாக்கியம் இல்லை என்றால் திருமண வாழ்வு நன்றாக இருக்காது என்பார்கள். ரஜ்ஜி பொருத்தம் பார்க்கும்பொழுது ரஜ்ஜி தட்டுகிறது அதனால் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள்.
ரஜ்ஜி பொருத்தம் சுக்கிரனை முதன்மையாக வைத்து பார்க்ககூடிய ஒரு பொருத்தம். சுக்கிரன் தாலிபாக்கியத்தை தருகிறார் என்பது பொதுவான கருத்து. ரஜ்ஜி தட்டினால் கூட இன்றைய காலத்தில் திருமணம் செய்கிறார்கள். ரஜ்ஜி தட்டும்பொழுது அவர்கள் சுக்கிரனை வழிபட்டால் நல்லது என்பார்கள்.
சுக்கிரன் திருமண வாழ்வில் முதன்மை வகிக்கிறார் என்பது இந்த பொறுத்தத்தை வைத்தே நாம் கண்டுக்கொள்ளலாம். பலருக்கு இன்றைய காலத்தில் சுக்கிரன் கிரகம் நன்றாக இருப்பதில்லை. நன்றாக இருந்தால் அவர்களின் திருமண வாழ்வும் நன்றாக இருக்கும் சுகபோக வாழ்க்கையும் அனுபவிப்பார்.
பலருக்கு நன்றாக இல்லை என்றால் முதலில் அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்தால் கூட நடக்காது என்பது தான் உண்மை. உங்களின் ஜாதகத்தில் திருமணம் நடக்கவில்லை என்றால் உங்களின் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்கிறார் என்பதை பார்ப்பதோடு சுக்கிரனின் பலமும் இருக்கின்றதா என்பதை பாருங்கள். சுக்கிரன் பலமாக இருந்தால் திருமணம் உடனே நடந்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment