வணக்கம்!
பல பேருக்கு குரு கிரகம் வேலை செய்யாமல் போவதற்க்கு ராகு கிரகம் தான் காரணமாக இருக்கும். ராகுவின் பலம் அதிகமாகிவிட்டால் குரு கிரகம் கொடுக்கவேண்டிய பலத்தை குறைத்துவிடும்.
ஒருத்தர் நல்லவனாக இருக்கவேண்டும் அல்லது கெட்டவனாக இருக்கவேண்டும். நல்லவனாக வேண்டும் என்றால் அவனுக்கு குரு பலனை கொடுக்கவேண்டும். கெட்டவனாக இருந்தால் ராகு கிரகம் பலன் கொடுக்கிறது என்று அர்த்தம்.
குரு கிரகம் தன் பலனை நன்றாக கொடுத்தால் போதும் அவனின் பெயர் புகழின் உச்சிக்கு செல்லும். நல்ல பெயரை எடுத்து புகழின் உச்சிக்கு செல்வான்.
ராகு கிரகமும் உச்சிக்கு கொண்டு செல்லும் ஆனால் அவரின் வளர்ச்சி வேறு விதமாக இருக்கும். இன்றைக்கு பலர் ராகுவின் வளரச்சியில் தான் புகழின் உச்சியில் அமர்ந்து இருக்கின்றனர்.
உங்களின் வளர்ச்சி குரு கிரகத்தின் வழியாக வந்தால் அது நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் அதற்கு காரணம் புகழின் உச்சிக்கு சென்றால் கீழே விழவைக்காது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment