வணக்கம்!
செவ்வாய் பரிகாரத்தால் பல பதிவுகள் தரமுடியாமல் போய்விட்டது அந்த பதிவுகள் எல்லாம் இனிமேல் தொடர்ந்து பல பதிவுகளை தருகிறேன்.
சனிக்கிரகம் ஒருவருக்கு வலுகுறைவாக அமையும்பொழுது அவர் இளமையிலேயே வறுமையை சந்திப்பவராக இருப்பார். ஒரு குழந்தைக்கு சனிக்கிரகம் வலுகுறைந்து பிறக்கும்பொழுது அவரின் குடும்பம் கடுமையான வறுமை சூழ்நிலையை அடையும்.
பெரும்பாலும் சனிக்கிரகம் வலுகுறையும்பொழுது புத்தியும் மந்தநிலையும் அடையும். மந்தநிலையில் இருப்பதால் தான் என்ன செய்துக்கொண்டு இருக்கிறோம் என்று தெரியாமல் அடிமை நிலையிலேயே இருப்பார்கள்.
சனிக்கிரகம் வலுகுறைந்து ஒருவருக்கு ராகு தசா நடந்தால் அவ்வளவு தான் என்று சொல்லலாம். நான் அனுபவத்தில் பார்த்த ஜாதகத்தில் எல்லாம் சனி வலுகுறைந்து ராகு தசா நடந்தால் அவர்களை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்குகிறது.
இந்தியாவின் ஜாதகத்தில் இப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் பலர் வறுமையில் தான் காலத்தை தள்ளிக்கொண்டு இருக்கின்றனர். பலரை பார்த்தாலே இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
உங்களின் ஜாதகத்தில் சனிக்கிரகம் வலு குறைந்து ராகு தசா நடக்கிறதா என்பதை பாருங்கள் அப்படி நடந்தால் உடனே நல்ல சோதிடரை அணுகி அதற்கு பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள் அல்லது சனிக்கிரகத்திற்க்கு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.
சனிக்கிரகம் வலுகுறைந்தாலும் அதற்கு பரிகாரம் அல்லது வழிபாட்டை செய்யும்பொழுது உங்களின் வறுமை நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment