வணக்கம்!
ஒருவருக்கு எட்டில் சந்திரன் இருந்து அவருக்கு ஏழரை சனி ஆரம்பித்தால் போதும் அவரை போட்டு அடி அடி என்று அடிக்கும் என்று சொல்லலாம். ஏழரை சனிக்கு முன்னாடி ஆடி காரில் சென்றவர் ஏழரை சனியில் வீட்டுக்குள் முடங்கிவிடுவார்.
சந்திரன் எட்டில் இருக்கும்பொழுது பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை அதாவது கணவன் மனைவிக்குள் அந்தளவுக்கு ஒற்றுமை என்பது இருக்காது. ஏழரை சனியின் காலத்தில் வீட்டிற்க்குள் இருந்தால் கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த இந்த ஏற்பாடு ஏழரை சனி செய்யும் என்பது மட்டும் உண்மை.
சந்திரன் எட்டில் இருந்தால் இது மட்டுமா என்று கேட்கலாம். ஒரு சிலருக்கு யோகமாகவும் அமைந்திருக்கிறது அது எப்படி என்றால் அவருக்கு ஏழரை சனி நடக்கும் காலத்தில் நல்ல தசா அல்லது குரு தசா நடக்கும் என்று சொல்லலாம்.
குரு தசா நடந்தால் பெரும்பாலும் தீயபலன் கொடுப்பதில்லை. ஒரு சிலருக்கு குரு தசாவில் ஏழரை சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால் அவர் குரு தசா காட்டும் காரத்துவத்தில் இருந்து விலகி இருக்கின்றார் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.
எதற்கும் பரிகாரத்தை பரிந்துரைக்கும் வழக்கம் நம்மிடம் இருப்பதால் பாக்கியஸ்தானம் மற்றும் பூர்வபுண்ணியஸ்தானம் காட்டும் காரத்துவத்தை கையில் எடுத்தால் இதற்கு பரிகாரமாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment