வணக்கம்!
செவ்வாய் பரிகாரம் செய்துக்கொண்டு இருந்த காரணத்தால் பதிவை நேற்று தரமுடியவில்லை. நினைத்ததை விட அதிகமான ஜாதகங்கள் வந்தன. அதனை எல்லாம் எடுத்து செய்த காரணத்தால் வேலை அதிகம். ஜாதக பலனை தரமுடியவில்லை சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கட்டண சோதிடசேவைக்கு வந்த ஜாதகங்களை பார்த்து பலனை சொல்லுகிறேன்.
செவ்வாய் பரிகாரத்திற்க்கு ஒரு பத்து ஜாதகங்கள் தான் வரும் என்று நினைத்து தான் ஆரம்பித்தேன். ஒருவரே பத்து ஜாதகங்களை அனுப்பி வைத்து இருக்கின்றனர். நிறைய ஜாதகங்கள் வந்துவிட்டன.
பல நண்பர்கள் சூரசம்ஹாரத்திற்க்கு என்று அவர் அவர்களின் பகுதியில் உள்ள கோவில்களுக்கு முடிந்த நிதி உதவியை கொடுத்து இருக்கின்றனர். என்னிடம் வந்த பணத்தையும் கோவில்களுக்கு கொடுத்து இருக்கிறேன்.
நீங்களும் உங்களால் முடிந்த உதவியை முருகன் கோவிலுக்கு கொடுங்கள். சூரசம்ஹாரம் நடைபெறும் கோவில்களுக்கு சென்று அன்று பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்தாலும் சரி. இனி மேல் செவ்வாய் பரிகாரத்திற்க்கு என்று ஜாதகங்களை அனுப்பவேண்டாம். அடுத்த செவ்வாய் பரிகாரம் என்று பதிவில் போடும்பொழுது அனுப்பிவைக்கலாம்.
பல நண்பர்கள் பொதுவான பரிகாரத்தை அவ்வப்பொழுது செய்யுங்கள் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். அதனை கண்டிப்பாக செய்கிறேன். இது எனது வருமானம் என்பதற்க்காக கிடையாது. பூஜைகள் செய்வதற்க்கு என்று ஒரு சிலர் பணத்தை எனக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர். அந்த பணத்தில் எனது பூஜைகள் செய்துக்கொள்கிறேன். உங்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு செலுத்திவிடுகிறேன்.
பல நண்பர்களுக்கு நான் முன்கூட்டியே சொல்லிவிட்டேன். அதாவது நீங்களே கோவில்களுக்கு செலுத்திவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன். இது போலவே அடுத்தடுத்து வரும் பரிகாரமும் இருக்கும்.
அடுத்தது கொஞ்சம் இடைவெளிவிட்டு பொதுவான பரிகாரத்தை சொல்லுகிறேன். அடுத்த பரிகாரம் ராகு கேது பொதுவான பரிகாரம். உங்களின் ஜாதகத்தில் ராகு கேது எப்படி வேலை செய்கிறது என்பதை தற்பொழுது இருந்தே அதனைப்பற்றி அலசி ஆராயுங்கள். அறிவிப்பு வெளியிடும்பொழுது உங்களின் ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment