வணக்கம்!
சுக்கிரதசா நடந்தால் ஒருவருக்கு நல்லது செய்யும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. சுக்கிரதசா நல்லது கொடுக்கும் அது யாருக்கு நல்லது கொடுக்கும் என்று விதி வைத்திருக்கிறார்கள் அல்லவா அவர்களுக்கு தான் நல்லது கொடுக்கும்.
ஒருவருக்கு சுக்கிரன் தசா ஆரம்பித்தால் அவர் சொகுசுவாழ்க்கைக்கு உள்ளே நுழைவார் ஆனால் அந்த சொகுசுவாழ்க்கையை கடைசி வரை தொடர்வாரா என்பது அவருக்கு வருகின்ற புத்தி தான் முடிவு செய்யவேண்டும்.
சுக்கிரனுக்கு ஏற்றவாறு புத்திநாதர்களும் நல்லபடியாக அமைந்தால் அவருக்கு கொடுக்கின்ற பலன் முழுமையாக கிடைத்துவிடும். புத்திநாதர்கள் சரியில்லை என்றால் சுக்கிரனின் முழுமையான பலனை பெறமுடியாது.
சுக்கிரதசா நடக்கிறது என்றால் அந்த ஜாதகர் நல்ல அம்மன் வழிபாட்டை மேற்க்கொண்டு வந்தால் அவருக்கு சுக்கிரதசாவின் முழுமையான பலனை பெற்று வாழமுடியும். அதோடு சுக்கிரனை எப்படி எல்லாம் பலப்படுத்தலாம் என்பதையும் கவனித்து செய்துவந்தால் அற்புதமான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும்.
ஒரு வீட்டில் ஒருவருக்கு சுக்கிரதசா நடந்தால் கூட போதும் அவரை வைத்தே அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மேம்பட்டு வந்துவிடலாம் என்பது என்னுடைய அனுபவத்தில் உள்ள கருத்து.
ராகு கேது பொதுபரிகார பூஜை இன்னும் ஆரம்பிக்கவில்லை ஜாதகத்தை அனுப்பமட்டும் சொல்லிருக்கிறேன். விரைவில் பூஜை ஆரம்பித்துவிடுவேன். உடனே உங்களின் ஜாதகத்தையும் பிரச்சினை என்ன என்பதையும் மற்றும் பணத்தையும் அனுப்பிவையுங்கள்.
வரும் ஞாயிற்றுகிழமை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்களை சந்திக்க வருகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment