வணக்கம்!
செவ்வாய் பரிகாரத்தின்பொழுது ஒரு நண்பர் எனக்கு ஒரு ஜாதகத்தை அனுப்பியிருந்தார். அவரின் உண்மையான ஜாதகம் எனக்கு தெரியும் ஆனால் அவரின் ஜாதகம் என்று ஒரு சார்ட்போட்டு அனுப்பினார். அவரின் ஜாதகம் கிடையாது. ஏதோ ஒரு கோபத்தில் எதிர்ப்பை காட்டுவதற்க்கு அனுப்பினாரா அல்லது விளையாட்டிற்க்காக அனுப்பினாரா என்று தெரியவில்லை நானும் அதனைப்பற்றி அவரிடம் கேட்கவும் இல்லை.
பொதுபரிகாரம் செய்வது தனியாக பரிகாரத்தை செய்யமுடியாத நபர்களுக்கு என்பதற்க்காக இந்த பரிகாரத்தை பரிந்துரைக்கிறேன். அதில் எந்த வித தவறும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன் நிறைய எதிர்ப்பு காட்டுவது விளையாட்டு தனம் செய்வது எல்லாம் நானும் ஒரு காலத்தில் செய்தேன். அது எல்லாம் எனக்கு பட்டு தெரிந்தபிறகு தான் அது தவறு என்பது எனக்கு புரிந்தது.
எந்த காலத்திலும் எதிர்ப்பை காட்டுவது ஒரு நல்ல செயல் நடக்கும்பொழுது அதனிடம் போய் விளையாட்டு தனம் செய்வது எல்லாம் செய்தால் இந்த பிரபஞ்சம் நமக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. இதனை எந்த காலத்திலும் செய்யாமல் இருக்க கற்றுக்கொண்டேன்.
தற்பொழுது ஆரம்பித்துள்ள ராகு பரிகாரத்திற்க்கும் நீங்கள் சரியான ஜாதகத்தை அனுப்பி அதற்கு பரிகாரம் செய்யுங்கள். இதில் எந்த வித சம்பாதிப்பதும் இல்லை. இதனை எல்லாம் சரியான ஒரு முறையில் செலவு செய்கிறேன்.
செவ்வாய் பரிகாரத்திற்க்கு என்று ஒரு நண்பர் தேவையான பணஉதவி செய்தவுடன் பலரிடம் நான் வெளிப்படையாகவே சொல்லிவிட்டேன் நீங்கள் கோவிலுக்கு செய்தால் போதும் அதனை செய்துவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள் என்றேன்.
பொதுபரிகாரம் ஒரு பொதுசேவை போல் செய்துக்கொண்டு இருக்கிறேன். இது தொடர்ந்து நடைபெற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment