வணக்கம்!
கிராமபுறங்களில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் எண்ணெய் எடுத்து உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு மண்ணில் உருண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும் என்பார்கள். உனக்கு என்ன யோகம் இருக்கின்றதோ அது தான் உனக்கு கிடைக்கும்.
ஜாதகத்திலும் இது உண்மையான ஒன்று. இன்றைக்கு பலருக்கு நிறைய யோகங்கள் இருக்கின்றன ஆனால் அந்த யோகம் எல்லாம் வேலை செய்யாமல் போய்விடுகின்றன என்பது தான் உண்மை. நீங்கள் எல்லாம் திறமையானவர்கள் தான் ஆனாலும் கஷ்டப்பட்டுக்கொண்டு தானே இருக்கின்றீர்கள் இதற்கு எல்லாம் என்ன காரணம் உங்களுக்கு யோகம் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
நான் யோகத்தை எல்லாம் நம்புவதில்லை என்று சொன்னால் நீங்கள் ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்று கொஞ்சம் நினைத்து பார்த்தால் உங்களுக்கு புரிந்துவிடும். திறமை இருக்கின்றது யோகம் தான் இல்லை.
ஒரு ஜாதகத்தில் தோஷம் என்பது இருக்ககூடாது. உங்களின் ஜாதகத்தில் தோஷம் இருந்தால் கிடைக்கின்ற யோகம் எல்லாம் போய்விடும். உங்களுக்கு கிடைக்கின்ற அனைத்து யோகத்தையும் முடிந்தளவுக்கு தடை செய்வது ராகு கேதுக்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இன்றைக்கு இருக்கும் பணக்காரர்கள் எல்லாம் நிறைய பூஜைகளை செய்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு யோகம் கிடைக்கவேண்டும் என்பதற்க்காக தான் செய்கின்றனர்.
உங்களின் ஜாதகத்தில் நிறைய தோஷங்கள் இருந்தால் கிடைக்கின்ற யோகம் உங்களுக்கு கிடைக்காது. நிறைய தோஷங்கள் இருந்தாலும் ஒரு சில யோகங்களும் உங்களின் ஜாதகத்தில் இருக்கும் அதனை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டியது தோஷத்தை எப்படி குறைக்கலாம் என்பதை மட்டும் பார்க்கவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment