வணக்கம்!
ராகு கேது பரிகாரத்தை பற்றி சொல்லிருந்தேன். இதுவரை பல ஜாதகங்கள் வந்துவிட்டன. விரைவில் பூஜை செய்ய தொடங்கிவிடுவேன். அந்த தேதி என்ன என்பதை பதிவில் தெரிவிக்கிறேன். விரைவில் ராகு கேது பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்ப இறுதி தேதி முடிவு வெளியாகும்.
ராகு கேது உங்களின் ஜாதகத்தில் நல்லதை செய்யதால் அதற்கு பரிகாரம் செய்யதேவையில்லை. உங்களுக்கு ராகு கேது பிரச்சினை தருகின்ற மாதிரி இருந்தால் அதற்க்கு பரிகாரம் செய்யலாம்.
உங்களுக்கு எந்த வேலையை செய்ய தொடங்கினாலும் அந்த வேலையில் உங்களுக்கு பல குழப்பங்கள் இருந்தால் உங்களின் ஜாதகத்தில் ராகு கேது சரியில்லை என்று அர்த்தம்.
உங்களின் ஜாதகத்தில் ராகு கேது உங்களை பிடித்து உலுக்கிக்கொண்டு இருக்கும். அது உங்களுக்கு தெரியாது நான் பார்த்த ஜாதகத்தில் பலருக்கு இந்த கிரகங்களால் தான் பிரச்சினை என்று நான் சொன்னபிறகு தான் அவர்களுக்கு தெரியும்.
பலர் சோதிடத்தை பார்க்க தெரியாமல் வேறு ஏதோ ஒரு கிரகத்திற்க்கு பரிகாரம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் உங்களின் ஜாதகத்தை நன்றாக பாருங்கள். பார்த்துவிட்டு அதன் பிறகு பரிகாரத்தில் இணைந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment