வணக்கம்!
இராகு கேதுவில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று. பித்ரு தோஷம் நிவர்த்தி. பித்ரு தோஷ நிவர்த்தி மட்டும் அவர் அவர்களே செய்ய வேண்டிய பரிகாரம். அதனை நான் மட்டும் செய்துவிடமுடியாது.
உங்களின் முன்னோர்கள் மற்றும் உங்களின் இரத்தவழியில் உள்ளவர்கள் மட்டும் நீங்கள் பங்கு பெறவேண்டும் என்பதால் இதனை தவிர்க்கலாம். இதனை செய்வதும் கொஞ்சம் கடினமான வேலை. அதாவது குறைந்த செலவில் செய்யமுடியாது என்பதால் தான் சொன்னேன்.
பித்ருதோஷம் இருப்பவர்கள் தங்களின் ஜாதகத்தை எனக்கு அனுப்பி அதனை தனிப்பட்ட பரிகாரமாக செய்துக்கொள்ள வேண்டுகிறேன். உங்களின் பித்ருக்கு நீங்கள் மட்டும் செய்யும்பொழுது மட்டுமே உங்களின் பித்ருக்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
பித்ருதோஷம் இல்லாமல் அது வேறு விதமாக செயல்பட்டால் அதற்கு நாம் பொதுபரிகாரம் செய்துக்கொள்ளலாம். மூன்றாவது வீடும் ஒன்பதாவது வீடும் பித்ருதோஷத்தில் சம்பந்தப்படும். மூன்றாவது வீடு தைரியத்தை கொடுக்கிற ஒரு ஸ்தானம் உங்களுக்கு தைரியம் இல்லை என்றால் அதற்கு பரிகாரத்தில் இடம் உண்டு.
பித்ருதோஷத்தை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் முதலில் உங்களுக்கு எதுவும் நடக்காது. எந்த ஒரு காரியமும் நடக்காது. அப்படியே இல்லை என்றால் பிறவியில் நீங்கள் ஏதாவது உங்களுக்கு ஊனம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது பித்ருதோஷத்தின் முதல் நிலை.
ராகு கேது பரிகாரம் செய்வது என்பது கொஞ்சம் கடினமான ஒரு வேலை என்பதால் தான் இதனை உடனே ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஜாதகமும் தனிப்பட்ட முறையில் செய்யவேண்டும் அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல விசயமும் நடைபெறவேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டுள்ளேன்.
ராகு கேது பொதுபரிகாரம் என்று உங்களின் மெயிலில் குறிப்பிட்டு மெயில் அனுப்புங்கள். உங்களின் ஜாதகத்தை எடுத்து உடனே அலசிவிட்டு உங்களின் ஜாதகத்தை அனுப்புங்கள்.
இதில் ஒன்றை சொல்லவேண்டும் எந்த ஒரு காரணம் கொண்டும் ராகு கேதுவிற்க்கு ஜாதகம் அனுப்பி பலனை கேட்ககூடாது. பலன் வேண்டும் என்றால் ஜாதகத்திற்க்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டு அதன்பிறகு கேளுங்கள். பலர் செவ்வாய் பரிகாரம் செய்யும்பொழுது ஜாதகத்தை அனுப்பி பொதுபலனை கேட்டார்கள். பரிகாரம் என்று வந்தால் அது தனி. பலன் என்பது தனி என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment