வணக்கம்!
நேற்றைய பதிவில் யோகத்தைப்பற்றி சொல்லிருந்தேன். அதனை நம்ம நண்பர்கள் அவர் அவர்களின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட யோகம் இருக்கின்றது என்று சொல்லிருந்தார்கள் மற்றும் எனக்கு இந்த யோகம் இருக்கின்றதா என்பதையும் கேள்வி கேட்டார்கள்.
ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் நிறைய யோகம் எல்லாம் இருக்கும் ஆனால் அது வேலை செய்கிறதா என்பது தான் கேள்வி. நிறைய பிச்சைக்காரர்களுக்கு கூட யோகம் எல்லாம் இருக்கும் அவர்களுக்கு யோகம் வேலை செய்தால் அவர்கள் ஏன் பிச்சை எடுக்க போகின்றார்கள்.
முதலில் ஒன்றை தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு யோகம் இருந்தால் ஜாதககதம்பத்தை எல்லாம் படித்துக்கொண்டு இருப்பீர்களா என்பது தான் கேள்வியாக இருக்கின்றது. யோகம் எல்லாம் ஒருவருக்கு வேலை செய்தால் அவர்களை பார்ப்பதற்க்கு கூட்டமே இருக்கும் என்று சொல்லலாம்.
மாதச்சம்பளத்தை எதிர்நோக்கும் ஒரு ஆளாக இருக்கமாட்டார்கள். அவர்கள் பலருக்கு மாதசம்பளத்தை போடுபவர்களாக இருப்பார்கள். இப்படி இருந்தால் தான் அவர்களுக்கு யோகம் இருக்கின்றது என்று அர்த்தம்.
மாதம் பத்தாயிரம் சம்பளத்தை வாங்கிக்கொண்டு எனக்கும் யோகம் இருக்கின்றதா என்றால் எப்படி நாம் அதனை ஏற்றுக்கொள்ளமுடியும். அனைவருக்கும் யோகம் இருக்கின்றது ஆனால் அது வேலை செய்வதில்லை என்பது தான் உண்மை. யாரையும் புண்படுத்தவேண்டும் என்பதற்க்கு இதனை சொல்லவில்லை. தங்களின் நிலையை உயர்த்த என்ன வழி என்பதை பாருங்கள் உங்களின் வாரிசுகளுக்கு அப்படிப்பட்ட யோகம் அமையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment