Followers

Monday, October 1, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
         சோதிடம் என்பது பெரிய கடல் என்பது உங்களுக்கு தெரியும். இந்த கடலை இறுதிவரை நாம் கற்றுக்கொண்டே இருந்தாலும் முழுவதுமாக கற்று தெரிந்துவிடமுடியாது. நாமும் ஒரு ஜாதகத்தை என்ன தான் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் ஒரு எல்லையை தாண்டி நாமும் அதனை ஆராய்ச்சி செய்துக்கொண்டே இருக்கமுடியாது.

சோதிடபலனை மட்டும் நாம் தெரிந்துக்கொண்டு அதன்பிறகு என்ன செய்யவேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கவேண்டும். சோதிடத்தையே ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருந்தால் நம்முடைய வாழ்க்கையை வாழ்வது என்பது கேள்விக்குறியாக மாறிவிடும்.

ஒரு சோதிடரிடம் சென்று சோதிடபலனை தெரிந்துக்கொள்ள செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் உங்களுக்கு ஒரு பத்து வருடம் நேரம் சரியில்லை நீங்கள் எதிலும் வெற்றி பெறமுடியாது என்று சொன்னால் அதனை கேட்டுவிட்டு நீங்கள் எதுவும் செய்யமுடியாமல் உட்கார்ந்துக்கொண்டே இருந்தால் உங்களின் வாழ்க்கை வீணாக சென்றுவிடும்.

வாழ்க்கையில் பத்து வருடத்தை வீணாக போய்விட்டால் அதன்பிறகு என்ன தான் செய்தாலும் அதனை சரி செய்வது என்பது முடியாத ஒரு காரியமாகவே இருக்கும். காலம் என்பதை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே ஒருவர் வெற்றி பெறமுடியும்.

சோதிடத்தை பாருங்கள் அதனை ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்து அதன்படி செயல்பட்டால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பரிகாரம் என்பதை பரிந்துரைக்கவேண்டும் என்பதற்க்காக சொல்லவில்லை உங்களை கொஞ்சம் மாற்றிக்கொண்டு செயல்பட்டாலே போதுமானதாக இருக்கும்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம். விரைவில் அம்மன் பூஜை நடைபெற இருக்கின்றது. நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கு கலந்துக்கொள்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: