Followers

Wednesday, October 17, 2018

தீபாவளி பரிகாரம்



வணக்கம்!
          இன்றைய நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கு கோயம்புத்தூரை சேர்ந்த திரு இராஜ சுந்தரேஷன் அவர்களின் குடும்பத்தினர் காணிக்கை அனுப்பியுள்ளனர்.

ஒரு மனிதனுக்கு கிரக அடியில் இருந்து தப்பித்தாலும் மனிதனின் கண்அடியில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினமான ஒன்று. கண் அடியைப்பற்றி நிறைய பதிவுகளை ஏற்கனவே தந்துள்ளோம். இந்த கண் அடியை கொடுப்பது உங்களின் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள நபர்களால் தான் வருகின்றது.

கண் அடியை போக்க என்ன செய்யலாம் என்று நிறைய பதிவுகளை கொடுத்து இருக்கிறேன். இதனை போக்க உங்களின் அருகில் உள்ள நபர்களுக்கு நாம் கொடுக்ககூடிய பரிசுகள் மிகச்சிறந்த ஒரு பரிகாரமாக இருக்கும்.

பண்டிகை காலங்களில் இதனை செய்தால் உங்களைப்பற்றி அடுத்தவர் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பண்டிகை காலங்களில் நாம் செய்யும் செயல் அடுத்தவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை. உங்களின் மீது சந்தேகம் வராது.

தீபாவளி பண்டிகை வருகின்றது. உங்களால் முடிந்த துணிகள் அல்லது ஏதோ ஒரு புதிய பரிசுகளை வாங்கி அடுத்தவர்களுக்கு கொடுத்துவிட்டால் உங்களின் மீது அடுத்தவரின் கண் எரிச்சல் மற்றும் வயிற்று எரிச்சல் விழாது.

உங்களைப்பற்றி அருகில் இருக்கும் நபர்கள் இவன் நமக்கு நல்லது செய்கிறான். இவனைப்பற்றி பொறாமை படகூடாது என்று எண்ணி உங்களை வாழ்த்த ஆரம்பித்துவிடுவார்கள். ஏழைக்கு தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. உங்களுக்கு அருகில் இருக்கும் நபர்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: